கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் அரசு டெண்டர்கள் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக எஸ்.பி.வேலுமணி மீது, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. பின்னர் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு செய்திருந்தார். அதையடுத்து இந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
அதைத் தொடர்ந்து தமிழக அரசு, ``எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள் முழு அளவில் திரட்டப்பட்டுள்ளன. இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எந்தவிதச் சலுகையையும் உச்ச நீதிமன்றம் வழங்கக் கூடாது" என பதில் மனு அளித்திருந்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இதை விசாரித்த நீதிபதிகள், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை, உயர் நீதிமன்ற பதிவாளர் மூன்று வாரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/in-ex-minister-sp-velumani-case-madras-high-court-should-submit-the-report-within-3-weeks-in-supreme-court
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக