மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் நடத்திவருகிறது. இந்த விசாரணையில் முதற்கட்டமாக, ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்போலோ மருத்துவர்கள், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி, ஓ.பி.எஸ் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். மேலும் இந்த விசாரணையின்போது, ``ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை" என ஓ.பி.எஸ் விசாரணை ஆணையத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் மீண்டும் நேற்று மறுவிசாரணை மேற்கொண்டது.
அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடமும், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ், சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்த வா.புகழேந்தியிடமும் விசாரணை நடைபெற்றது.
ஏற்கெனவே ராமமோகன்ராவ், ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்துவது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
மேலும், புகழேந்தி மனு மீதான விசாரணைக்கு, அவர் ஏப்ரல் 26-ம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. அதனால், எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்படுமா... இல்லையா என்பது தொடர்பான தகவல் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/arumugasamy-commission-will-investigate-eps-regarding-jayalalitha-death
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக