Ad

வியாழன், 21 ஏப்ரல், 2022

``உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரைக் கைப்பற்றிவிட்டோம்” - ரஷ்யா அறிவிப்பு

உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, அப்பாவிப் பொதுமக்களையும் ரஷ்யப் படைகள் கொன்று குவித்துவருவதாக உக்ரைன், ரஷ்யாமீது தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. பல்வேறு உலக நாடுகள் இரு நாடுகளுக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிகள் செய்துவருகின்றன. இந்தப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.

ரஷ்ய அதிபர் புதின்

இந்த நிலையில், உக்ரைன் நாட்டிலுள்ள முக்கிய நகரமான மரியுபோல் நகரைக் கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புதின் ``மரியுபோல் நகருக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது. மரியுபோலைக் கைப்பற்றியதற்காக ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு எனது பாராட்டுகள்” என்றார். `மரியுபோல் நகரிலுள்ள இரும்புத் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் அந்தத் தொழிற்சாலையைக் கைப்பற்ற வேண்டும்' என ரஷ்ய ராணுவத்தினருக்கு புதின் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/russia-says-ukraines-mariupol-city-captured

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக