மதுரவாயல், கிருஷ்ணா நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க செயலாளராக இருக்கிறார். இவர், தன்னுடைய காரை வீட்டின் அருகே நிறுத்திவைத்திருந்தார். இரவில் அந்த கார் தீப்பிடித்து எரிந்தது.
அதைப் பார்த்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் இது குறித்து சதீஷ்குமார், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது, ஆணும் பெண்ணும் காரின் மீது ஏதோ ஒன்றை ஊற்றுவது தெரிந்தது. அவர்கள் யாரென்று விசாரித்தபோது அதுவும் சதீஷ்குமார் எனத் தெரியவந்தது.
இதையடுத்து சதீஷ்குமாரிடம் கேட்டதற்கு, தன்னுடைய மனைவிக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக காரை தீ வைத்ததாகத் தெரிவித்தார். தன்னுடைய காருக்குத் தானே தீ வைத்த சம்பவத்தையடுத்து சதீஷ்குமாரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். சிசிடிவி கேமராவில் உள்ள பெண் யாரென்று விசாரித்தபோது அது சதீஷ்குமாரின் மகள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/bjp-secretary-car-got-fire-at-maduravoyal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக