`பீஸ்ட்' கலெக்ஷன் எவ்வளவு? படம் வெற்றியா, தோல்வியா என பட்டிமன்றங்கள் ஒரு பக்கம் பரபரத்தாலும், சத்தமே இல்லாமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.
'தோழா' வம்சி பைடிபலி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'விஜய் 66' படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. 'காதலுக்கு மரியாதை', 'பூவே உனக்காக' போல இது ஃபேமிலி ஆடியன்ஸைக் கவரும் கதை எனப் படத்தின் தில் ராஜூவே நம்பிக்கை மின்னச் சொல்லியிருக்கிறார்.
கடந்த சில வாரத்திற்கு முன்னர் துவங்கிய இப்படத்தின் பூஜையைத் தொடர்ந்து படத்தின் ஷூட்டிங்கும் கோகுலம் ஸ்டூடியோவில் நடந்தது. விஜய் - ராஷ்மிகா, சரத்குமார் காம்பினேஷனில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. படத்திற்கான பாடல்களில் இரண்டை தமன் தயார் செய்து கொடுத்துவிட்டார். அதில் ஒரு பாடலுக்கான காட்சியை எடுத்து வருகின்றனர். விஜய்யும், ராஷ்மிகாவும் இதில் நடனமாடியுள்ளனர். இந்தப் பாடல் ஷூட் இன்னும் சில நாள்களில் முடிவடைகிறது. இத்துடன் 'விஜய் 66' முதல் ஷெட்யூலும் நிறைவடைகிறது.
இதனை அடுத்து ஹைதராபாத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அதில் பிரகாஷ்ராஜ் உள்பட மற்ற நடிகர்களின் காட்சிகள் ஷூட் செய்யப்பட உள்ளதாம். 'விஜய் 66' படத்தை முழு மூச்சாக முடித்துவிட்டு 'விஜய் 67' படத்திற்குச் செல்கிறார் விஜய்.
'விஜய் 67' படத்தை அநேகமாக லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் என்ற பேச்சு இருக்கிறது. லோகேஷும் 'விக்ரம்' படத்தை முடித்துவிட்டார். எனவே ஜூலையில் இருந்து விஜய் படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க்கில் இறங்கிவிடுவார் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் விஜய் அலுவலகத்தில் இயக்குநர்கள் லோகேஷ், நெல்சன், அட்லீ ஆகியோர் விஜய்யைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அதில் விஜய்யிடம் லோகேஷ் ஒன்லைன் சொல்லி, ஓகே வாங்கிவிட்டதாகவும், அதற்கான ஸ்கிரிப்ட்டைத்தான் ரெடி செய்து வருகிறார் என்றும் சொல்கிறார்கள்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/updates-regarding-vijay-66-and-vijay-67-movies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக