Ad

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

ராமநாதபுரம்: வளைகாப்புக்கு மறுநாள்... மின்கம்பி அறுந்து விழுந்து கணவர் பலி! - கர்ப்பிணி கண்ணீர்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இதுவரை ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முலம் கலந்துரையாடினார். அதன்படி ராமநாதபுரம், பரமக்குடியில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயனடைந்த 366 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த காணெலி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார். அப்போது கடந்த 12-ம் தேதி செவ்வாய்கிழமை, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாகுளம் வயல்காட்டு பகுதியில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த வாகைகுளும் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணன் (31), மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்துள்ளது. இவர் மனைவி அபிராமி கர்ப்பிணியாக உள்ளார். மாரிக்கண்ணன் இறப்புதற்கு முதல் நாள் திங்கள்கிழமைதான் அபிராமிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. அதன் மறுநாளே இந்த துயரச்சம்பம் நடந்தது, அங்குள்ள கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அறிந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் தனதுதொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரு. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாரிக்கண்ணன்

மேலும் ராமநாதபுரம் கோட்ட மின்சாரத்துறை செயற்பொறியாளர் பிரீத்தியிடம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துறை செய்தார். அதன்படி கணவனை இழந்த அந்தப் பெண்ணுக்கு ரு.5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழ அரசின் மின்சாரதுறை சார்பில் உத்தரவிட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, நடைபெற்ற காணொலி நிகழ்ச்சியில் முதலமைச்சர் முன்னிலையில் 5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ராஜகண்ணப்பன் கணவனை இழந்த அபிராமியிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர்பாட்ஷா, எம்.பி. நவாஷ்கனி, மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அபிராமியிடம் நாம் பேசும்போது, ``பிறக்கபோகும் குழந்தை அப்பா எங்கே என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்லபோகிறேன் என தெரியவில்லை. இந்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனது கணவரை திருப்பித்தாருங்கள்" என கதறிஅழுதார். அவரை சமாதானம் செய்த அப்பெண்ணின் தாய், தந்தை, இறந்த மாரிக்கண்ணன் தாய், தந்தை ஆகியோர், `பணம் கொடுத்தால்போன உயிர்திரும்ப கிடைத்து விடுமா, இவர்கள் அலட்சியத்தால் எங்கள் வீட்டுபெண்ணின் வாழ்க்கை பாழாகிவிட்டது’ என கண்ணில் நீர்வழிய வேதனையுடன் கூறி சென்றனர்.



source https://www.vikatan.com/news/accident/husband-died-in-electricity-accident-minister-gave-compensation-to-pregnant-wife

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக