Ad

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

VIDEO: ட்ரோன் முதல் ஏவுகணை வரை... சத்தமின்றி தாக்கும் லேசர் ஆயுதம் `அயர்ன் பீம்' - இஸ்ரேல் அதிரடி

தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் நுழையும், ஆளில்லா விமானம், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் போன்றவற்றை கண்ணுக்கே தெரியாமல் சத்தமின்றி தாக்கும் லேசர் ஆயுத டெக்னாலஜியை, இஸ்ரேல் உலகிலேயே முதல்முறையாக வெற்றிகரமாக சோதனை செய்துமுடித்துள்ளது. இஸ்ரேல், இந்த லேசர் அணு ஆயுதத்துக்கு `அயர்ன் பீம்' என பெயரிட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்(Naftali Bennett), ``இந்த புதிய `அயர்ன் பீம்' (இரும்புக்கு கற்றை) லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை, இஸ்ரேல் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இது அறிவியல் புனைகதை போல் தோன்றலாம், ஆனால் இது உண்மை. இந்த அயர்ன் பீம் குறுக்கீடுகள், வான் எல்லைக்குள் நுழையும் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் ட்ரோன்கள் போன்றவற்றை கண்ணனுக்கு தெரியாமல், சத்தமின்றி துல்லியமாக தாக்கக்கூடியவை. அயர்ன் பீம் மூலம் இதுபோன்று ஒருமுறை தாக்குதல் நடத்த 3.50 டாலர் தான் செலவாகும்" என கூறினார்.

மேலும், எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க, அடுத்த பத்தாண்டுகளில் இஸ்ரேலின் எல்லைகளைச் சுற்றி லேசர் அமைப்புகளைப் பயன்படுத்துவதே இலக்கு" என்றும் பென்னட் கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் பென்னட் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

லேசர் அமைப்பின் செயல்திறன் பற்றி இன்னும் அதிகம் அறியப்படவில்லையெனினும், இது நிலத்திலும், காற்றிலும் மற்றும் கடலிலும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறுகின்றனர்.



source https://www.vikatan.com/technology/international/in-world-first-israel-successfully-tests-new-laser-missile-defense-system

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக