Ad

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

இலங்கை: தீவிரமடைந்த எதிர்க்கட்சிகள், மக்கள் போராட்டம் - அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா!

இலங்கையில் கடந்த சில வாரமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருள்கள் விலை கடுமையக உயர்ந்துள்ளது. எனவே , இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.

மக்களின் கடும் கொந்தளிப்பால் ஊரடங்கும் போடப்பட்டு ராணுவம் தீவிர ரோந்து பணியில் உள்ளது. இந்த நிலையில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வந்த தகவல் வதந்தி எனவும், தற்போது அப்படி எந்த திட்டமும் இல்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை

இதைத் தொடந்து நேற்று நள்ளிரவு நடந்த இலங்கையின் அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, ``இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித்த பின்னர், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரின் சகோதரரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சேவை தவிர ஒட்டுமொத்தமாக 26 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறோம். எங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தால் தான் அதிபர் புதிய அமைச்சரவை அமைக்க முடியும் ” எனத் தெரிவித்தார்.

பதவி விலகி உள்ள அமைச்சகளில் ராஜபக்சேவின் சகோதரர்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/international/entire-srilankan-cabinet-resigned-after-people-protest-against-economic-crisis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக