Ad

வியாழன், 4 மார்ச், 2021

ஜெயலலிதா ஸ்டைலைப் பின்பற்றும் எடப்பாடி - தயார் நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடத்தப்படுகிறது. மே 2-ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகிறது. ஜெயலலிதா இருந்தவரையில் முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது அவரது வழக்கம். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதனால் கட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் இழுபறி ஏற்பட்டு வந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதுகூட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் அ.தி.மு.கவில் சிக்கல் எழுந்தது. அதனால் காலதாமதமாகவே பட்டியல் வெளியானது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் நேற்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பே உளவுத்துறை கொடுத்த தகவல்களை வைத்து, ஒரு பட்டியலை கட்சித் தலைமை தயாராக வைத்திருக்கிறது. ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் தேர்தல் என்பதால் வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது ஏற்படும் அதிருப்திகளைச் சமாளிக்க கட்சித் தலைமை யோசித்து வருகிறது. அதனால் ஜெயலலிதா ஸ்டைலில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட கட்சித் தலைமை முடிவு செய்திருக்கிறது. அதில் முதல்வர், துணை முதல்வர், சிறுபான்மை பிரிவினர் போட்டியிடும் 2 தொகுதிகள், ஒரு பெண் வேட்பாளர் என 5 பேரின் பெயர்கள் வெளியிடப்படவுள்ளது. கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை முடிவானதும் அடுத்தக்கட்ட பட்டியல் வெளியிடப்படும் என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Also Read: பிரசார வாகனத்தில் விஜயகாந்த்; `கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து அதிமுக-விடம் கேளுங்கள்!’ - பிரேமலதா



source https://www.vikatan.com/news/politics/admk-first-candidate-list-to-be-released

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக