Ad

வியாழன், 7 ஜூலை, 2022

பாஜக - காங்கிரஸ் தொண்டர்களிடையே வன்முறை மோதல்: மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு | Video

மத்தியப் பிரதேசத்திலுள்ள 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்தது. இந்தத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு (5-ம் தேதி) இந்தூரில் பாரதிய ஜனதா கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையின் காரணமாக காதிபுரா பகுதியிலுள்ள 20-வது வார்டு பா.ஜ.க கவுன்சிலர் வேட்பாளரின் அலுவலகம் சூறையாடப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

பாஜக - காங்கிரஸ் தொண்டர்களிடையே வன்முறை மோதல்

அதேபோல, நேற்று தேர்தலின்போது வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நேற்று நடந்த ஒரு வன்முறைச் சம்பவத்தில், பெண்கள் உட்பட காங்கிரஸ் தொண்டர்கள், பா.ஜ.க-வின் 22-வது வார்டு வேட்பாளர் சந்துராவ் ஷிண்டேவின் காரை வழிமறித்து அவரை வாகனத்திலிருந்து வெளியே வருமாறு கோஷமிட்டனர். அவர் காரிலிருந்து வெளியேறியதும், காரின் கண்ணாடிகளைச் செருப்பால் அடித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும், சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஷிண்டே எப்படியோ காயமின்றிக் காப்பாற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க வேட்பாளர் ஷிண்டேவின் கார் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக-வினர் காங்கிரஸுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு ஹீரா நகர் காவல் நிலையத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஹீரா நகர் காவல்துறை அதிகாரி டிஎஸ் யெவாலே கூறுகையில், “இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாகத் தெரியவந்திருக்கிறது. இந்த வன்முறை தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-congress-workers-clash-in-madhya-pradesh-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக