Ad

ஞாயிறு, 3 ஜூலை, 2022

ஜம்முவில் கைதான தீவிரவாதி பாஜக-வின் மாநில முன்னாள் ஐடி விங் தலைவரா? - அதிர்ச்சி தகவல்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளைப் பிடிக்க உதவும் கிராமத்துக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா அறிவித்திருந்தார். இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள துக்சன் தோக் கிராமத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் புல்வாமாவைச் சேர்ந்த பைசல் அகமது தார், ராஜாவுரியைச் சேர்ந்த தாலிப் ஹுசைன் ஆகிய இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏ.கே ரக துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கியை காவல்துறை மீட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர்

இந்த கைது நடவடிக்கை தொடர்பாக மனோஜ் சின்ஹா கூறுகையில், ``மிகவும் தேடப்படும் இரண்டு தீவிரவாதிகளைக் கைது செய்வதில் மிகுந்த தைரியத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்திய துக்சன் தோக் கிராமவாசிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு யூனியன் பிரதேச அரசின் மூலம் வழங்கப்படும். கிராமவாசிகளின் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன். இத்தகைய உறுதியான துணிச்சல் தீவிரவாதத்தின் முடிவு வெகுதொலைவில் இல்லை என்பதைக் காட்டுகிறது.

இரண்டு தீவிரவாதிகளில், ஹுசைன் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட தீவிரவாதி காசிமுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தார், மேலும் ரஜோரி மாவட்டத்தில் குறைந்தது மூன்று குண்டுவெடிப்பு வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான தலிப் ஹுசைன், பா.ஜ.க-வில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

பாஜக நிர்வாகி இர்ஷத்துடன் ரியாஸ் அட்டாரி

ஜம்மு மாகாணத்தின் சிறுபான்மை மோர்ச்சாவின் ஐடி மற்றும் சமூக ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், தாலிப் ஹுசைன் 18 நாட்கள் மட்டுமே கட்சியில் உறுப்பினராக இருந்தார், மே 27, 2022 அன்று ராஜினாமா செய்துவிட்டார் என்று பா.ஜ.க தரப்பு விளக்கமளித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் செய்திதொடர்பாளர் பதானியா இது குறித்து பேசுகையில், ``ஆன்லைன் வழியே யார் வேண்டும் என்றாலும் கட்சியில் சேரலாம் என்பதால் இது போல் நிகழ்ந்திருக்கிறது. இது மோசமானது தான். ஆன்லைன் வழியே உறுப்பினர்கள் இணையும் போது அவர்களின் குற்றப்பின்னணி குறித்து ஆராய முடியாமல் போய்விடுகிறது” என்றார்.

ஏற்கெனவே உதய்பூர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பா.ஜ.க-வுடன் தொடர்பு இருப்பது போன்று வெளியான தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.



source https://www.vikatan.com/news/india/former-jk-bjp-minority-morcha-it-cell-chief-among-2-lashkar-terrorists-arrested-in-jk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக