Ad

வியாழன், 14 ஜூலை, 2022

அதிமுக: முற்றும் மோதல்... ட்விட்டரில் இ.பி.எஸ்-ஸை அன்ஃபாலோ செய்த ஓ.பி.எஸ்!

பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியைவிட்டு நீக்கப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்வினையாற்றும்விதமாக எடப்பாடியும், கே.பி.முனுசாமியும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ் அறிவித்தார்.

இப்படியாகப் பிரச்னை சென்றுகொண்டிருக்கும்போது, ட்விட்டரில் எடப்பாடியை ஃபாலோ செய்துவந்த ஓ.பி.எஸ் தற்போது அன்ஃபாலோ செய்திருக்கிறார்.

ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு முன்பாக

அதாவது, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் 56 பேரை ஓ.பி.எஸ் ஃபாலோ செய்துவந்தார். இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கடும் யுத்தம் நடத்திவரும் நிலையில், இ.பி.எஸ்-ஸை மட்டும் அன்ஃபாலோ செய்து, தனது எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவுசெய்திருக்கிறார் பன்னீர்.

ஆனால், தன்னைக் கடுமையாகச் சாடிய பிற அ.தி.மு.க தலைவர்களை ஓ.பி.எஸ் இன்னும் ஃபாலோ செய்துகொண்டுதான் இருக்கிறார்.

அதேநேரத்தில், இ.பி.எஸ்-ஸோ ஆரம்பகாலத்திலிருந்தே அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தை மட்டுமே ஃபாலோ செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/o-panneer-selvam-unfollowed-edappadi-palanisamy-on-twitter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக