Ad

செவ்வாய், 12 ஜூலை, 2022

`அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு... ரூ.500 கோடி கண்டுபிடிப்பு’ - வருமான வரித்துறை

நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்சன்ஸ் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திலும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் தொடர்பான இடங்களிலும் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `தமிழ்நாட்டில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் மற்றும் விளம்பர ஏஜென்சி நடத்தி வரும் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் மீதான வரிஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை, மதுரை உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

ரெய்டு

இந்த சோதனையின் படி இரு நிறுவனங்களில் இருந்தும் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், கணக்கில் வராத தங்க நகைகள், சொத்து விவரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த சொத்து மதிப்பு 500 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தார்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என குறிப்பிட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/aruppukottai-contractor-seyyadurai-and-covai-raid-details

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக