Ad

புதன், 13 ஜூலை, 2022

45 துப்பாக்கிகளுடன் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட தம்பதி - டெல்லியில் அதிர்ச்சி

டெல்லி சர்வதேச விமானநிலையமான இந்திரா காந்தி விமான நிலையத்தில் கணவன் மனைவியான ஜக்ஜித் சிங், ஜஸ்விந்தர் கவுர் ஆகிய இருவர் இரண்டு டிராலி பேக்குகளுடன் வந்துள்ளனர். சோதனை மையத்தில் அதனை சோதித்தபோது இரண்டு பேக் முழுவதும் கைத்துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தேசியப் பாதுகாப்புப் படை, தீவிரவாத தடுப்புப் பிரிவு அந்த துப்பாக்கிகள் உண்மையானவையா அல்லது போலி துப்பாக்கியா எனச் சோதனையிட்டனர்.

டெல்லி விமான நிலையம்

அதன் பின் அளித்த முதற்கட்ட அறிக்கையில், ``துப்பாக்கிகள் முழுமையாகச் செயல்படுவதைத் தேசியப் பாதுகாப்புப் படை (NSG) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த துப்பாகிகள் தொடர்பாக அந்த தம்பதியிடம் விசாரித்தபோது, ஜக்ஜித் சிங், `எனது சகோதரர் மஞ்சித் சிங் பாரீஸிலிருந்து வியட்நாமுக்கு நாங்கள் வந்து தரையிறங்கிய பின்னர் இந்த பைகளை என்னிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு, மஞ்சித் சிங் விமான நிலையத்தை விட்டுச்சென்றுவிட்டார். துருக்கியிலிருந்து மேலும் 25 கைத்துப்பாக்கிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்தோம்" எனக் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். துப்பாக்கிகள் கொண்டு வந்ததன் நோக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காவல்துறை

குற்றம்சாட்டப்பட்டுள்ள தம்பதிகள் எடுத்துச் சென்ற இரண்டு டிராலி பேக்குகளில் தோராயமாக ரூ 22.5 லட்சம் மதிப்புள்ள 45 வகையான பிராண்டட் துப்பாக்கிகள் இருந்துள்ளன. இந்த சம்பவம் இந்திரா காந்தி விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



source https://www.vikatan.com/news/crime/indian-couple-with-45-pistols-arrested-at-delhi-airport

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக