உலகின் அதிக சம்பளம் பெறும் சிஇஓ-க்கள் பட்டியலை Fortune வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் டெக், பயோடெக் நிறுவனங்களின் சிஇஓ-க்கள்தான் அதிகம். அவர்கள் யார் யாரெனப் பார்ப்போம்.
டெஸ்லாவின் சிஇஓ எலான் மஸ்க் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். 2021 ஆண்டில் மட்டும் ஸ்டாக் ஆப்ஷன் உட்பட இவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் 23.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ.1.82 இலட்சம் கோடி.
ஆப்பிளின் சிஇஓ டிம் குக் அடுத்த இடத்தில் இருக்கிறார். 770.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இவருக்கு வழங்கப்பட்ட ஊதியம். இந்திய மதிப்பில் ரூ.6000 கோடி.
டெக் நிறுவனமான NVIDIA-வின் இணை இயக்குநர் மற்றும் தலைமை அதிகாரி ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) 2021-ல் 561 மில்லியன் டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார்.
உலகம் முழுவதும் புதிய பொழுதுபோக்குத் தளமாக உருவாகி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ் (Reed Hastings) 453.5 மில்லியன் டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார்.
Regeneron Pharmaceuticals நிறுவனத்தின் சிஇஓ Leonard Schleifer 452.9 மில்லியன் டாலர் ஊதியமாக பெற்றிருக்கிறார். இந்த நிறுவனம் கோவிட்க்கு எதிரான எதிர்ப்புத்திறன் மிக்க மருந்துகளை உற்பத்தி செய்தது.
மென்பொருள் தயாரிக்கும் Salesforce நிறுவனத்தின் தலைவர் Marc Benioff, 2021-ம் ஆண்டில் 439.4 மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார்.
7வது இடத்தில் இந்தியரான சத்ய நாதெல்லா இடம்பெற்றிருக்கிறார். மைக்ரோசாப்ஃட்டின் தலைமை பொறுப்பு வகிக்கும் இவருக்கு ஊதியமாக அளிக்கப்பட்டது 309.4 மில்லியன் அமெரிக்க டாலர்.
வீடியோ கேம் தயாரிப்பு நிறுவமான Activision Blizzard-ன் தலைவர் Robert A.Kotick 2021-ல் 296.7 மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியமாக பெற்றிருக்கிறார்.
மென்பொருள் உட்கட்டுமான பொருள்கள் தயாரிக்கும் Broadcom நிறுவனத்தின் தலைவர் Hock E. Tan இந்தப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற ஊதியம் 288 மில்லியன் டாலர்.
மென்பொருள் தயரிப்பில் ஈடுப்பட்டிருக்கும் Oracle நிறுவனத்தின் சிஇஓ Safra A.Catz பத்தாவது இடத்தில் இருக்கிறார். 2021-ல் 239.5 மில்லியன் டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார்.
source https://www.vikatan.com/ampstories/news/international/top-10-most-highly-compensated-ceos-fortune-list
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக