Ad

செவ்வாய், 31 மே, 2022

தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஓய்வுபெற்ற 25,000 அரசு ஊழியர்கள் - அதிகரித்த காலி பணியிடங்கள்

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்றனர். கடந்த 2020-ல் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58-லிருந்து 60 ஆக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஓய்வுபெறுபவர்களின் வயது உயர்த்தப்பட்டதால் புதிதாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தடைபட்டது. அரசின் இந்த முடிவு அப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

தமிழக அரசு

அப்படி வயது நீட்டிப்பால் 2020-ல் ஓய்வுபெற வேண்டியவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டுடன் அவர்களுக்கு 60 வயதாகிவிட்டதால் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் என 25,000 பேர் நேற்று ஒரே நாளில் ஓய்வுபெற்றார்கள்.

ஏற்கனவே தமிழக அரசு அலுவலகங்களில் 1,50,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், தற்போது கூடுதலாக 25,000 காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அரசு ஊழியர்கள்

கடந்த ஆட்சியில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்க நிதி இல்லாததால்தான் வயது நீட்டிப்பு அளித்து எடப்பாடி பழனிசாமி தப்பித்துக் கொண்டார் என்றும் அரசு ஊழியர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்



source https://www.vikatan.com/news/tamilnadu/25000-government-employees-retirement-in-one-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக