காலை எழுந்ததும் காபி, டீக்கு பதில் ஐஸ்க்ரீமும் கூல்டிரிங்க்கும் கேட்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிப்பது? கடைகளில் விற்கும் ஐஸ்க்ரீம், ஜூஸ் அயிட்டங்கள் தவிர்த்து, ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செம கூலாக, ஹெல்த்தியாக செய்து கொடுக்கலாமே... கூல் ரெசிப்பீஸுடன் இந்த வார வீக் எண்டை குளுகுளுவென என்ஜாய் செய்யுங்கள்
தேவையானவை:
திராட்சை (பச்சை (அ) கறுப்பு) - 100 கிராம்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - கால் கப்
செய்முறை:
திராட்சையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் கால் கப் தண்ணீரை ஊற்றிச் சூடாக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கரையவிட்டு இறக்கவும். பிறகு, வடிகட்டிய திராட்சை சாற்றைச் சேர்த்துக் கலக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி, ஃப்ரீசரில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வெளியே எடுத்து முள் கரண்டியால் நன்கு கிளறவும். இதேபோல நான்கு முறை செய்யவும். நன்கு மிருதுவாக செட்டான பிறகு ஐஸ்க்ரீம் ஸ்கூப்பால் எடுத்துப் பரிமாறவும்.
தேவையானவை:
ஸ்ட்ராபெர்ரி - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
தண்ணீர் - முக்கால் கப்
எலுமிச்சைப் பழம் - பாதி (சாறு பிழியவும்)
செய்முறை:
சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, சர்க்கரை கரைந்த பிறகு இறக்கவும். (சிரப் போல வரும்). ஸ்ட்ராபெர்ரியுடன் எலுமிச்சைச் சாறு, மீதமுள்ள தண்ணீர் சேர்த்து அரைத்தெடுக்கவும். அதனுடன் சர்க்கரை சிரப் சேர்த்துக் கலந்து ஃப்ரீசரில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வெளியே எடுத்து முள் கரண்டியால் கிளறவும். இதேபோல நான்கு முறை செய்யவும். சோர்பத் மிருதுவாக செட்டான பிறகு ஐஸ்க்ரீம் ஸ்கூப்பால் எடுத்துப் பரிமாறவும்.
தேவையானவை:
தோல், விதை நீக்கிய தர்ப்பூசணித் துண்டுகள் - ஒரு கப்
புதினா இலைகள் - 6
நாட்டுச் சர்க்கரை (அ) பிரவுன் சுகர் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - அரை கப்
செய்முறை:
தர்ப்பூசணித் துண்டுகளுடன் புதினா இலை, நாட்டுச் சர்க்கரை (அ) பிரவுன் சுகர், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து வெளியே எடுத்து முள் கரண்டியால் நன்றாகக் கிளறவும். மீண்டும் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல இரண்டு முறை செய்து எடுத்துப் பரிமாறவும்.
தேவையானவை:
சிறிய முலாம்பழம் – ஒன்று (தோல், விதைகளை நீக்கி, துண்டுகளாக்கவும்)
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
புதினா இலை - 6
தண்ணீர் - கால் கப்
செய்முறை:
முலாம்பழத் துண்டுகளுடன் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, புதினா, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து வெளியே எடுத்து முள் கரண்டியால் நன்றாகக் கிளறவும். மீண்டும் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல இரண்டு முறை செய்து எடுத்துப் பரிமாறவும்.
தேவையானவை:
தோல் சீவிய இளம் நுங்கு - 4
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக் கவைத்து, சர்க்கரை கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். நுங்கை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். சர்க்கரைத் தண்ணீருடன் அரைத்த நுங்கு விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து வெளியே எடுத்து ஒரு முள்கரண்டியால் கிளறவும். மீண்டும் ஃப்ரீசரில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வெளியே எடுத்துக் கிளறவும். இதே போல மூன்று முறை செய்யவும். சோர்பத் மிருதுவாக செட்டான பிறகு ஐஸ்க்ரீம் ஸ்கூப்பால் எடுத்துப் பரிமாறவும்.
source https://www.vikatan.com/food/recipes/grape-sorbet-watermelon-granetta-palm-sorbet-weekend-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக