Ad

வெள்ளி, 12 மே, 2023

வாட்ஸ்அப் கால், பணபரிவர்த்தனை, கஞ்சா... ரெளடி கும்பலுடன் தொடர்பில் இருந்த கோவை போலீஸ் கைது

கோவை மாவட்டத்தில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த அடுத்தடுத்த கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதன் பின்னணியில் கஞ்சா பிசினஸ், கட்டப்பஞ்சாயத்து, கேங் வார் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்ந்து கைதுசெய்து வருகின்றனர்.

கோவை கொலை

கடந்த சில வாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ரெளடிகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். சமீபத்தில் பெங்களூருவில் வைத்து 7 ரெளடிகளை, உயர் ரக போதைப்பொருள்களுடன் போலீஸ் கைதுசெய்தனர்.

அவர்களில் அஸ்வின், சுஜிமோகன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றும் ஶ்ரீதர், வழக்கறிஞர் ஆஷிக் அலி உதவியதாக  கூறியிருக்கின்றனர்.

ரெளடி அஸ்வின்
ரெளடி சுஜி மோகன்

அதாவது கஞ்சா கடத்ததில் ஈடுபடும்போது காவல்துறை  சோதனையில் இருந்து மாற்று வழியில் செல்வது, வழக்குகளில் சிக்காமல் எப்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபட வேண்டும், காவல்துறையின் அசைவு உள்ளிட்ட தகவல்களை கூறியிருக்கின்றனர்.

ரெளடிகளிடம் ஶ்ரீதர், ஆசிக் ஆகியோர் வாட்ஸ்அப் மூலம் உரையாடி வந்திருக்கின்றனர். அதனை ரெளடிகள் மற்றொரு மொபைல் மூலம் ரெக்கார்டு செய்திருக்கின்றனர்.  அதேபோல ரெளடிகளிடம் இருந்து இவர்கள் இருவருக்கும் பண பரிவர்த்தனையும் நடைபெற்றது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஶ்ரீதர்
ஆஷிக்

 இந்த ஆவணங்களையும் போலீஸ் கைப்பற்றியிருக்கின்றனர். அதனடிப்படையில் இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/coimbatore-police-arrested-who-helps-ganja-network

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக