Ad

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

சுஷ்மிதா சென், அமித் ஷா பெயர்களில் புதிய மாம்பழ ரகங்கள்... உத்தரப்பிரதேச விவசாயி அசத்தல்..!

உத்தரப்பிரதேசத்தில் அதிகப்படியான புதிய மாம்பழங்களை உருவாக்கியவர் காஜி காலிமுல்லா. இவர் இதற்கு முன்பு, தான் உருவாக்கிய புதிய மாம்பழ ரகத்துக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் சச்சின் டெண்டுல்கர் பெயரை வைத்திருக்கிறார். தற்போது புதிதாக மேலும் இரண்டு புதிய ரக மாம்பழங்களை தனது தோட்டத்தில் உருவாக்கி இருக்கிறார்.

அந்த மாம்பழத்துக்கு நடிகை சுஷ்மிதா சென் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பெயரை வைத்திருக்கிறார். உத்தரப்பிரதேசத்தின் மாலிஹாபாத் என்ற இடத்தில் உள்ள பண்ணையில் இந்த மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. மாம்பழங்களின் மன்னனாகக் கருதப்படும் மாம்பழ ரகங்களிலிருந்து இந்தப் புதிய மாம்பழ ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காஜி காலிமுல்லா

இது குறித்து காஜி கலிமுல்லா கான் அளித்த பேட்டியில், ``நடிகை சுஷ்மிதா சென்னின் அழகு, அவரது சமூக சேவை, இரண்டு குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்ப்பது மற்றும் அன்பாக இருப்பது போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டு புதிய ரக மாம்பழம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அப்பழத்திற்கு சுஷ்மிதா என்று பெயரிட்டுள்ளேன்.

முதலில் ஐஸ்வர்யா ராய் பெயரில் மாம்பழ ரகத்தை அறிமுகப்படுத்தினேன். அதன் பிறகு மிகவும் தாமதமாக சுஷ்மிதா சென் குறித்து என்னிடம் சொன்னார்கள். சுஷ்மிதாவின் அழகு இந்த உலகில் எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவர் நல்ல இதயம் கொண்டவர் என்பதை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும். அதனால்தான் புதிய மாம்பழ ரகத்தை உருவாக்கி அதற்கு சுஷ்மிதாவின் பெயரை வைத்திருக்கிறேன். மத்திய அமைச்சர் அமித் ஷா பெயரில் மாம்பழத்தை உருவாக்க மிகவும் சிரமப்பட்டேன். அதிக சுவையுடன், வாசனையாக அதே சமயம் பெரியதாக இருக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறேன். இந்த மாம்பழங்கள் விரைவில் விற்பனைக்கு வரும்" என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/new-mango-varieties-named-after-sushmita-sen-amit-shah-uttar-pradesh-farmer-is-amazing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக