Ad

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

Doctor Vikatan: பெரியவர்களும் பேபி சோப் பயன்படுத்தலாமா?

பெரியவர்கள் பேபி சோப் உபயோகிக்கலாமா? சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் எந்த சோப் உபயோகிக்க வேண்டும்?

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

பெரியவர்களும் தாராளமாக பேபி சோப்பை பயன்படுத்தலாம். ஒருவருக்கு ஏற்ற சோப்பை எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்வி பலருக்கும் உண்டு.

அது நமது சருமத்தின் பி.ஹெச் அளவைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது.

Soap

ஆரோக்கியமான சருமம் என்பது 5.4 முதல் 5.9 வரையிலான பி.ஹெச் அளவுக்குள் இருக்க வேண்டும். இந்த பி.ஹெச் அளவைத் தொந்தரவு செய்யாதவகையில் தான், நாம் சோப் பயன்படுத்த வேண்டும்.

எனவே நாம் தேர்ந்தெடுக்கும் சோப்பானது சருமத்தின் பி.ஹெச் அளவிலேயே இருக்க வேண்டும். சோப்பின் பி.ஹெச் அளவானது அதிகரிக்கும்போது, அது நம் சருமத்தின் பி.ஹெச் அளவையும் அதிகரித்துவிடும்.

Skin Care

சருமத்தின் பி.ஹெச் அளவு அதிகரிக்கும்போது, அது நீர்ச்சத்தை இழந்து வறண்டு போகும். சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் சிண்டெட் பார் ( Syndet bar) என்பதை உபயோகிக்கலாம். மற்றவர்கள் நம் சருமத்தின் ஈரப்பதத்தை பாதிக்காதவகையில் பி.ஹெச் பேலன்ஸ் உள்ள மைல்டான சோப் தான் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-can-adults-use-baby-soap

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக