தாய்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் கணவனை கவனித்து கொள்ள பெண்கள் தேவை என வெளியிட்ட விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி தன் கணவனை கவனித்து கொள்வதற்கும், அவரை திருப்திபடுத்தவும் எண்டெர்டெயின் செய்யவும் மூன்று பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.
ஒரு வீடியோ பதிவாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் பேசிய அவர், "என்னுடைய கணவனை கவனித்து கொள்வதற்கு மூன்று பெண்கள் தேவை. அவர்கள் அழகாகவும், இளமையாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டும். மூன்று பேரில் இருவர் என் கணவரின் அலுவலகப் பணிகளில் உதவியாக இருக்க வேண்டும். மீதமுள்ள ஒருவர் என் வீட்டை கவனிப்பதோடு என் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். அவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு குழந்தை இருக்க கூடாது, அது ஒரு தடையாக அமையும். என் கணவர் மிகவும் கடுமையாக உழைப்பவர். அவரின் மகிழ்ச்சிக்காகவே இவை அனைத்தையும் செய்கிறேன். அவரை அனைத்து வகையிலும் கவனித்து நிம்மதியாக வைத்து கொள்ள எனக்கு ஆட்கள் தேவை." எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த வேலைக்கு வரும் பெண்களுக்கும் தனக்கும் எந்த வித சண்டையும் வராது என உறுதி அளித்த பதீமா, இந்த வேலைக்கு சம்பளமாக மாதம் 15,000 பாத் (33,800 ரூபாய்) தருவதாகக் கூறினார். பதீமா மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் கணவரின் எந்த தேவையையும் கவனித்து கொள்ள முடியாததாலும் உடல் அளவில் அவரை திருப்தி செய்ய முடியாததால் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக கூறுகிறார்.
அவரின் கணவரான படாகார்ன் இந்த விளம்பரத்தை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் அதை எதிர்க்கவில்லை. "இந்த வேலையை ஏற்று வரும் பெண் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நடத்தப்படுவார். வேறு ஏதாவது ஆண்களுக்கும் இதுபோல் நடக்க வேண்டும் என ஆசை இருந்தால் அவர்கள் தங்களின் மனைவியிடம் தான் பேச வேண்டும். என் மனைவியே இப்படி ஒரு வாய்ப்பை வழங்கும் போது அதை மறுக்க எனக்கு எண்ணம் இல்லை." எனக் கூறினார்.
இந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இந்த வேலையை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண் பதீமா சாம்னனின் நெருங்கிய தோழி என்றும் கூறுகின்றனர். விளம்பரம் வெளியிடப்பட்ட போது மூன்று பெண்களை வேலையில் சேர்ப்பதாகக் கூறி இருந்தாலும் தற்போது இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
source https://www.vikatan.com/news/international/thai-woman-advertisement-that-women-need-to-take-care-of-their-husbands
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக