சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்படுத்தப்படும் கோவிட் ஹெல்த் கோட் மொபைல் செயலி, கொரோனா தொற்று காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அதில் இருக்கும் 48.5 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர் ஒருவர் ஹேக் செய்து விட்டதாகவும், அதனை விற்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில், "XJP" என்ற பெயரைக் கொண்ட ஹேக்கர், கடந்த புதன்கிழமை `ஹேக்கர் ஃபோரம் ப்ரீச் ஃபோரம்ஸ்’(hacker forum Breach Forums) என்ற தளத்தில் தன்னிடமுள்ள தகவல்களை 4,000 டாலர்-க்கு விற்பதற்காக அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த தரவுகளில், தொலைப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் சீன அடையாள எண்கள் மற்றும் உடல்நலம் தொடர்பான குறியீடு நிலை உள்ளிட்ட தரவுகள் உள்ளதாகவும் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும், அதிலிருந்து 47 பேரின் தரவுகள் மாதிரியின் பட்டியலை தரவுகளை வாங்குபவர் சரிபார்ப்புக்காக வெளியிட்டிருக்கிறார். இருப்பினும் அதில் இருவர், தங்கள் அடையாள எண்கள் தவறாக இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். இந்த தரவுகளில் உள்ள அனைவரும், ஷாங்காயில் வசிப்பவர்கள் என்று XJP தனது பதிவில் விளக்கியிருக்கிறார்.
கடந்த மாத தொடக்கத்தில் ஒரு ஹேக்கர் ஒரு பில்லியன் சீன குடிமக்களுக்குச் சொந்தமான 23 டெராபைட் தனிப்பட்ட தகவல்களை ஷாங்காய் காவல்துறையிடமிருந்து சேகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/crime/hacker-offers-to-sell-data-of-485-million-users-of-shanghais-covid-app
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக