Ad

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

ஒன் பை டூ

இதாயதுல்லா, துணைத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

“நியாயமான கருத்து. எனினும், முதல்வரையோ, அரசையோ கே.எஸ்.அழகிரி நேரடியாகக் குற்றம்சாட்டவில்லை. காவல்துறையைத்தான் சாடியிருக்கிறார். மேலிடத்தைக் கேட்காமலேயே காவல்துறை இது போன்று செயல்படுவது தொடர்ந்துவருகிறது. காவல்துறைக்குள்ளேயே பா.ஜ.க-வுக்கு ஆதரவளிக்கும் சில கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள்தான் இப்படியான செயல்களில் ஈடுபடுவதாகக் கருதுகிறேன். மோடி படத்தை ஒட்டிய பா.ஜ.க-வினர், கறுப்புமை பூசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் என இரு தரப்பையும் சேர்த்துக் கைதுசெய்திருந்தால்கூட பிரச்னையாகியிருக்காது. இதே தவற்றைத்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்திலும் காவல்துறை செய்தது; அதன் விளைவுதான் கலவரம். இப்படி ஒரு தரப்புக்கு மட்டும் சாதகமாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகளால்தான் அரசுக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது. இப்படியான போக்குத் தொடருமேயானால், பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குவங்கியை தி.மு.க இழக்க நேரிடும். எனவே, அரசும் முதல்வரும் இனியாவது இது போன்ற விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.”

இதாயதுல்லா
சபாபதி மோகன்

சபாபதி மோகன், கொள்கை பரப்புச் செயலாளர், தி.மு.க

“கே.எஸ்.அழகிரியின் கருத்தை முற்றிலும் மறுக்கிறேன். நாட்டின் பிரதமர் சென்னைக்கு வருகிறபோது தேவையில்லாத ஒரு பிரச்னையை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காகக் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை அது. காவல்துறை எப்போதுமே சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்துவருகிறது. தமிழ்நாடு காவல்துறை, பா.ஜ.க உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் பயப்படத் தேவையில்லை. அந்த அளவுக்குத் தளபதி ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி விவகாரம்தான். கள்ளக்குறிச்சியை மற்றொரு தூத்துக்குடியாக மாறவிடாமல், அடிபட்டு, மிதிபட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது காவல்துறைதான். காவல்துறையில் கறுப்பு ஆடுகள் இருப்பதாக காங்கிரஸார் சொல்வது உண்மை கிடையாது. ஒரு பிரச்னை, அதன் மீதான நடவடிக்கையைப் பொறுத்துத்தான் அதற்கான பொலிட்டிக்கல் மைலேஜ் கிடைக்கும். சாதாரண இந்த போஸ்டர் விவகாரத்துக்கு பொலிட்டிக்கலாக எந்த மைலேஜும் இல்லை. அதனால், இதை அரசியலாக்கத் தேவையில்லை!”



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-ks-alagiri-statement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக