Ad

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

கோவை: வெடிக்கும் போஸ்டர் விவகாரம்... நள்ளிரவில் குவிந்த திமுக, பாஜக-வினர்!

கோவை மாவட்டத்தில் சமீப காலமாக போஸ்டர் கலாசாரம் அதிகரித்து வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் போஸ்டர்களை ஒட்டி வந்தனர். இதையடுத்து, 'பொது இடங்களில் போஸ்டர் ஒட்டக் கூடாது.

கோவை திமுக போஸ்டர்

மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்தது. அதன் பிறகும் கூட அரசியல் கட்சிகள் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டுவதை நிறுத்தவில்லை.

முக்கியமாக திமுக தரப்பில் மேம்பாலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மெகா சைஸ் பேனர் அளவில் போஸ்டர்களை ஒட்டி வந்தனர். போஸ்டர் ஒட்டக் கூடாது என்ற உத்தரவில் அரசியல் கட்சிகளுக்கு 10 நாள்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

பா.ஜ.கவினர்

ஆனாலும், திமுக தரப்பில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நேற்று முன்தினம் அவிநாசி சாலையில் பா.ஜ.கவினர் போஸ்டர் ஒட்ட முயற்சி செய்தனர்.

அப்போது அங்கு ஏராளமான திமுக-வினர் கூடினர். தொடர்ந்து பாஜக-வினரும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ``மாவட்ட நிர்வாகம் திமுக-வுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடின், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாங்களே போஸ்டர்களை கிழிப்போம்” என பா.ஜ.கவினர் கூறினர்.

போலீஸ்

இதையடுத்து, நேற்று இரவு 10 மணிக்கு மேல் அவிநாசி சாலையில் ஏராளமான பா.ஜ.கவினர் திரண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவிநாசி சாலை முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

திமுக-வினரும் அவிநாசி சாலையில் கூடவே பதற்றம் அதிகரித்தது. தி.மு.கவின் போஸ்டர்களை அகற்ற சொல்லி, பா.ஜ.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் தி.மு.க தரப்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பா.ஜ.கவினர் கிழித்தனர்.

போஸ்டர் மோதல்
போஸ்டர் மோதல்
கிழிக்கப்பட்ட போஸ்டர்

அப்போது பா.ஜ.கவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பா.ஜ.கவினர் போஸ்டர்களை கிழித்த நிலையில், தி.மு.கவினர் புதிய போஸ்டர்களை ஒட்டினர். இதையடுத்து அவிநாசி சாலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/coimbatore-dmk-bjp-poster-issue-what-happened-in-avinasi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக