Ad

புதன், 10 ஆகஸ்ட், 2022

வாசகர் மேடை: உ.நா.கெ. எ.நா.கெ. கழகம்!

ஓ.பி.ரவீந்திரநாத்தை ஆதரிக்கும் சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கட்சி ஆரம்பித்தால் கட்சியின் பெயர், சின்னம் என்னவாக இருக்கும்?

வருத்தப்படாத அ.தி.மு.க-வினர் கழகம். சின்னம்: இரட்டைக் குக்கர்.

பா.ஜெயக்குமார்

தி.தி.மு.க.

(தியான தியாக முன்னேற்றக் கழகம்). சின்னம்: குக்கர் மேல் மெழுகுவத்தி.

டி.ஜெயசிங்

கட்சியின் பெயர்: ‘உறவுகள் முன்னேற்றக் கழகம்.' சின்னம்: தலையாட்டி பொம்மை (இருவரும் டெல்லி சொல்வதை தலையாட்டிக் கேட்க எப்போதும் ரெடி என்பதால்!)

எம்.கலையரசி

சி.ப.மு.க. (சின்னம்மா பன்னீர் முன்னேற்றக் கழகம்!) கட்சியில் சேர்ந்தால் முன்னேறலாம் என்பதை சிம்பாலிக்காகச் சொல்ல ‘படிக்கட்டுகள்' சின்னத்தைப் பயன்படுத்தலாம்!

இரா.வசந்தராசன்

மிச்ச மீதி அ.தி.மு.க. இட்லிச் சின்னம்!

நா.இரவீந்திரன்

ரோசமான ரத்தத்தின் ரத்தங்கள் பேரவை - இரட்டை இலைத் தாமரைச் சின்னம்.

இர.செல்வநிகிலா

உ.நா.கெ. எ.நா.கெ. கழகம் (அதாவது, உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட்டாய் கழகம்.) சின்னம்: காலை வாரும் கைத்தடி.

RahimGazzali

பாஜக-விடம் கேட்க வேண்டிய கேள்வியை, பொது மக்களிடம் கேட்டால் எப்பூடி?

Akbar09935705

மன்னார்குடி - தேனி மக்கள் எழுச்சிக் கழகம். சின்னம்: இரட்டைத் தழை.

maha40176220

மனம் தளராமல் மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழருவி மணியன் இப்போது யாரை முதல்வராக்கப் பாடுபடலாம்? காரணம்?

ஜி.கே.வாசன் - காமராஜர் ஆட்சியை, தஞ்சாவூர் காமராஜர் ஆகிய மூப்பனாரின் மகன் வாசன் தருவார் எனப் பிரசாரம் மேற்கொள்ளலாம்.

பர்வீன்

அப்படியே மைக்கை நம்ம பக்கம் திருப்புவாங்களே. ‘ஜெயிலர்'ல பிஸியா இருப்பது மாதிரியே காட்டிக்கலாம்: ரஜினி

பெ.பாலசுப்ரமணி

நடிகை குஷ்பு. அவருக்கு எந்தக் கட்சியிலும் உரிய அங்கீகாரம் வழங்குவதில்லை.பாவம்... இவராவது அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கட்டுமே!

சத்தியமூர்த்தி.G

அண்ணாமலைக்காக உழைக்கலாம். ஒரு நியமன

எம்.பி சீட்டாவது கிடைக்கட்டுமே!

ரிஃபாத்துன்னிஷா

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவரான அர்ஜுன மூர்த்தியை முதல்வராக்கப் பாடுபடலாம். ரஜினியை முதல்வராக்க முடியல, அவர் நண்பரையாவது முதல்வராக்கட்டுமே.

PG911_twitz

ரஜினி அளவுக்கு இவரை நம்பி, தன் கூடவே வைத்துக்கொள்ள தீபாகூட சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்பதால் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

IamUzhavan

திருச்சியில் மக்களைச் சந்தித்த அஜித்தை முதல்வராக்கப் பாடுபடலாம்! அ.தி.மு.க-வின் முதல் பொதுக் கூட்டத்தைத் திருச்சியில்தான் எம்.ஜி.ஆர் நடத்தினார். ஆக ‘அடுத்த எம்.ஜி.ஆர் நீங்கதான் என்று தோன்றுகிறது’ எனக் கூறலாம்!

pbukrish

‘முதல்வர் ஆக விருப்பம் உள்ளவர்கள் என் கட்சியில் இணையலாம்’ என்று ஒரு அறிக்கை விட்டு, கட்சிக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கையைத் தாறுமாறாக அதிகரிக்கலாம்.

balebalu

தனுஷைத் தொடர்ந்து மற்ற தமிழ் சினிமா ஹீரோக்கள் ஹாலிவுட் போனால் என்ன கேரக்டர்களில் நடிக்கலாம்?

ஜிம் கேரி கேரக்டரில் வைகைப்புயல் நடித்தால் ஹாலிவுட் புயலாக மாற வாய்ப்புண்டு!

மஹஜூதா

ராபர்ட் பேட்டின்சன் நடித்த பேட்மேன் கேரக்டரில் குழந்தைகளின் ஃபேவரிட் ஹீரோ சிவகார்த்திகேயன் நடிக்கலாம்.

அஹமத்

ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் விஷால் நடிக்கலாம்.

ஆர்.ஹரிகோபி

விஜய் சேதுபதி... ‘தி கிரேட் டிக்டேட்டர்' படத்தில் சாப்ளின் மைக் பிடிச்சுப் பேசிக்கிட்டேடேடே இருப்பார், அந்த கேரக்டர் போல...

ஸ்வாதி சுசீ

‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' படத்தில் ஜாக் ஸ்பாரோ வேடத்தில் சிவகார்த்திகேயன்.

எம்.விக்னேஷ்

லெஜண்ட் சரவணன் ஹாலிவுட்டுக்குப் போய் டெர்மினேட்டராக நடித்தால் உலகமே விசிலடித்துக் கொண்டாடும்.

அஜித்

‘கிளாடியேட்டர்' படத்தில் ரஸல் க்ரோ செய்தது மாதிரியான கேரக்டரை கமல் செய்தால்... கிளாஸாவும் இருக்கும், மாஸாவும் இருக்கும்..!

LAKSHMANAN_KL

ஜோக்கர் கேரக்டரில் சிம்புவும், ஹார்லி குயின் கேரக்டரில் கீர்த்தி சுரேஷும் நடித்துக் கலக்கலாம்.

SriRam_M_20

பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் நடித்தால் அது ‘துக்கடா' கேரக்டராகத்தான் இருக்கும் (உ-ம்: ரஜினியின் ‘ப்ளட் ஸ்டோன்’). அதனால் ஹாலிவுட் படங்களில் நடிக்காமல் இருப்பதே நல்லது.

Sivakum31085735

‘காட் ஃபாதர்’ படத்தில் மார்லன் பிராண்டோ நடித்தது போன்ற கேரக்டர்களில் விஜய் சேதுபதி நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

JaNeHANUSHKA

ஏஞ்சலினா ஜோலி நடித்த கதாபாத்திரங்களில் தமன்னா பொருந்திவருவார்.

kayathaisathya

மச்சி, பாஸ், சகோ, ப்ரோ - காலந்தோறும் மற்றவர்களை அழைக்கும் வழக்கம் மாறிவருகிறதே... எது ரொம்ப நெருக்கமான வார்த்தை, ஏன்?

ஏலே... மக்க... நெருக்கம் பாசம் உணர்த்தும் வார்த்தைகள் இவையே.

கோவில்பட்டி கணேசன்.

மச்சி, பாஸ், ப்ரோ, சகோ போன்ற வார்த்தைகளைவிட மிக நெருக்கமான வார்த்தை ‘தோழர் ' என்பதுதான். ஒருவித கம்பீரமான, கெளரவமான உணர்வைத் தரும் வார்த்தை.

வீ.வைகை சுரேஷ்

‘மச்சி'தான் ரொம்ப கிக்கான வார்த்தை... என்னமோ நிஜ மச்சினன் மாதிரி!

ப.சோமசுந்தரம்

தல! - குரூப்பின் ஹீரோ என்பதற்கு இதை விட்டால் வேறு வார்த்தை ஏது?

மூ.மோகன்

தம்பிதான். பாசத்தோடு அந்நியோன்யத்தையும் வெளிப்படுத்தும் வார்த்தை. தற்போதைய செஸ் ஒலிம்பியாட்டின் ட்ரெண்டிங்கே அதானே.

மன்னார்குடி

இராஜகோபால்

‘பாஸ்' என்பது நெருக்கமான வார்த்தை மட்டுமன்று; வயது வித்தியாசம் பாராமல் உயர்வு நவிற்சியாக பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் வசதியான வார்த்தை.

லீலாராம்

ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும், பார்த்தவுடனே ‘டேய்' என்று சொல்லி ஆரம்பிக்கும்போது இருக்குற நெருக்கம் வேற எதிலும் இருக்காது.

NedumaranJ

மாப்பி- சுருக்கமாகவும் நெருக்கமாகவும் இருக்கும்.

manipmp

எங்க ப்ரெண்ட்ஸ் ‘செட்டுல’ ஒருத்தர் மட்டும் எங்கள் எல்லோரையும்விட இரண்டு வயது மூத்தவர். நாங்க எல்லோரும் அவரை ‘பெருசு’ன்னுதான் கூப்பிடுவோம்.

krishmaggi

மதுரையில் இளைஞர்கள் ஏ.. மா.. ப்.. ள என்று அந்த ‘ப்'ஐ அழுத்திக் கூப்பிடுவார்கள்.அந்த நெருக்கமான நட்பே அலாதிதான்.

sendhilmohan

கரூர் பக்கம் ‘பங்காளி' என்று அழைப்பது வழக்கம். அதையும் பின்னர் சுருக்கி ‘பங்கு' ஆக்கிவிட்டனர்...

RPRASANNA303030

ஒவ்வொரு குரூப்பிலும் காலாவதியான மொக்கை மெசேஜை ஃபார்வர்டு செய்பவர்களுக்கு ஒரு செல்லப் பெயர் சூட்டுங்களேன்!

ரம்பமெம்பர்

அ.ரியாஸ்

ஆறின கஞ்சி

கே.எம்.ரவிச்சந்திரன்

‘புளிச்ச மாவு'ன்னு செல்லமா அழைக்கலாம்.

கே.ஆர்.அசோகன்

கீழடி கிங்...

sasitwittz

பரண். (தூசி தட்டிய பொருள்களை அங்கிருந்துதான் எடுக்க முடியும் என்பதால்!)

adiraibuhari

கிரைண்டர். அரைத்துப் பொடியாக்கியதை மீண்டும் மீண்டும் அரைத்துக்கொண்டே இருக்கும்.

skkaran_68

******

? ஜி.எஸ்.டி பற்றி நான்கு வரியில் ஒரு ஜாலி கவிதை...

? 75-ம் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியராக நீங்கள் பெருமைப்படும் ஒரு விஷயம்..?

? சமீபத்தில் மோதிக்கொண்ட சீமானும் ஜெயக்குமாரும் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் என்ன கேரக்டர்களில் நடிக்கலாம்? டைட்டில் என்ன?

? கமலின் ‘விக்ரம்' சாதனையை முறியடிக்கும்படி ரஜினியின் அடுத்த படத்தின் கதை எப்படி இருக்க வேண்டும்?

? டைம் டிராவலில் சேர சோழ பாண்டியர் காலத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com



source https://www.vikatan.com/news/general-news/vasagar-medai-august-17-2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக