Ad

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

மும்பை: உரசிக்கொண்ட ரயில்கள்... தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!

மும்பை தாதரில் இருந்து வாரத்தில் இரண்டு நாள்கள் புதுச்சேரிக்கு தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாள்களும் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். நேற்று இரவு வழக்கம் போல் ரயில் தாதரில் இருந்து புறப்பட்டு சென்ற போது ரயில் அடுத்த ரயில் நிலையமான மாட்டுங்கா அருகே சென்ற போது ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு மாறும்போது பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் புறத்தில் உள்ள மூன்று பெட்டிகள் வேறு ஒரு எக்ஸ்ப்பிரஸ் ரயிலுடன் உரசிக்கொண்டது. இதனால் பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து

ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தடம் புரண்ட ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் கமிஷனர் காலித் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ``தாதரில் இரண்டு ரயில்கள் லேசாக உரசிக்கொண்டது. இதில் தடம் புரண்ட புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக புறப்பட்டு சென்றது. இரவில் நடந்த இச்சம்பவத்தால் ரயில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். மத்திய ரயில்வேயில் இந்த மாதம் நடக்கும் இரண்டாவது ரயில் விபத்து இதுவாகும். இதற்கு முன்பு நாசிக்கில் கடந்த 3-ம் தேதி பவன் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/accident/pudhucherry-express-derails-in-mumbai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக