Ad

வெள்ளி, 10 ஜூலை, 2020

தாராவி: `தீவிர பரவலையும் தடுக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு!’ - பாராட்டும் WHO

ஆசியாவில் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக மும்பையின் தாராவி அறியப்படுகிறது. இங்கிருக்கும் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 6,00,000-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனாவின் தடுப்பு நடவடிக்கைகளில் முதலாவதாகக் கூறப்படுவது சமூக விலகல்தான். ஆனால், தாராவியில் அதற்குச் சாத்தியமே இல்லாத அளவுக்கு வீடுகள் மிகவும் நெருக்கமாக இருக்கும். அப்படிப்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, முதல் முறையாகக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தாராவி

கூட்ட நெரிசல் மற்றும் முறையான கழிவறை வசதி இல்லாத தாராவியில் மிகவும் விரைவாகக் கொரோனா பரவும் என மும்பை மாநகராட்சி கணித்தது. அதே போலவே மே மாதம் இறுதிக்குள் 1,000 பாசிட்டிவ் கேஸ்கள் பதிவாகின. உயிரிழப்புகளும் 50-ஐ கடந்திருந்தன. கொரோனாவுக்கு எதிரான மும்பையின் போராட்டத்துக்கு தாராவி பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனை, சிகிச்சை, தடம் கண்டறிதல் ஆகிய நடவடிக்கைகளால் தற்போது ஒரு இலக்க பாசிட்டிவ் கேஸ்கள் மட்டுமே அங்கு பதிவாகியுள்ளன.

Also Read: கொரோனா: `4டி நடைமுறை; ஒரே ஒரு பாசிட்டிவ் கேஸ்!’ - சாதித்துக் காட்டிய தாராவி

அதிலும் கடந்த 7-ம் தேதி தாராவியில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கு மட்டுமே வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனாவை வென்ற தாராவியை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இது தொடர்பாக WHO-வின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ள கருத்தில், ``கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்த நாடுகளில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதனால் அங்கு மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அனைத்து நாடுகளின் ஒற்றுமை, சமூக பங்களிப்பு, இணைந்த நடவடிக்கை ஆகியவை மூலமே இந்தத் தொற்றுநோயை விரட்ட முடியும்.

WHO - டெட்ரோஸ்

கொரோனா வெடிப்பு தீவிரமாக இருந்தாலும் அதை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதற்கு உலகம் முழுவதிலும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா மற்றும் இந்தியாவின் தாராவி ஆகிய பகுதிகள் கடுமையான பரவலிலிருந்து மீண்டுள்ளன. நோய் பரவலின் மீது வலுவான கவனம் செலுத்துதல், அனைவரையும் சோதனை செய்தனர், தடமறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சையளித்தல் ஆகியவற்றை முழுமையாகக் கடைப்பிடித்தால் வைரஸ் சங்கிலியை உடைத்து மேலும் கொரோனா பரவலைத் தடுக்கலாம் என்பதை இந்தப் பகுதிகள் செய்து காட்டியுள்ளன” என்று தெரிவித்துள்ளார். தாராவியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசும் முன்னதாகப் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தாராவியில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 2,359 அதில் சுமார் 1,952 பேர் குணமடைந்துள்ளனர். 80-க்கும் அதிமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு 166 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக வைரஸ் உறுதியாகும் எண்ணிக்கையும் ஒற்றை இலகத்தில் உள்ளது.

Also Read: கொரோனா: தப்பிக்குமா தாராவி... தமிழர்கள் நிலை என்னவாகும்? - எச்சரிக்கையில் மும்பை மாநகராட்சி!



source https://www.vikatan.com/news/india/who-praises-dharavi-for-covid-19-containment-efforts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக