தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் ஆகஸட் 1 முதல் 31வரையிலான புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் இன்று மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
அதன்படி, தற்போது தமிழகத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். இது ஜூலை மாதத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இ-பாஸ் நடைமுறை தொடரும்
மெட்ரோ ரயில், பயணிகள் ரயில், விமானப் போக்குவரத்துக்கு முதலியவற்றுக்கான தடை தொடர்கிறது. பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தடை தொடர்கிறது.
மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் நடைமுறை தொடரும்.
காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. முன்னதாக காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் ஏற்கெனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட கடைகள் தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி.
ஆகஸ்ட் 15-ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்.
தற்போது 50% பணியாளர்களுடன் செயல்படும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் 75% பணியாளர்களுடன் இயங்கலாம்.
அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், அதாவது ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ள கோயில்கள், சிறிய மசூதிகளிலும் தர்காகளிலும் தேவாலயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
தொடரும் தடைகள் :
பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வுகளும் இன்றி கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்.
மால்கள், சினிமா திரையரங்குகள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தடை தொடர்கிறது.
தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கேளிக்கை கூடங்கள், ஜிம்கள், பார்கள் முதலியவற்றுக்கு புதிய ஊரடங்கிலும் தடை தொடர்கிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/new-lock-down-relaxation-announced-in-tamilnadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக