Ad

திங்கள், 20 ஜூலை, 2020

Corona Live Updates: உலக அளவில் 1.48 கோடி - இந்தியாவில் 11.5 லட்சம் பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் 11.5 லட்சம் பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,084 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,24,578 ஆகவும் உயர்ந்துள்ளது.

Also Read: கொரோனா: இட்டோலிஸுமாப் மருந்து! - மூன்றாம்கட்ட ஆராய்ச்சிக்கு விலக்கு ஏன்?

கொரோனா - உலக நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,48,51,246 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 89,06,297 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,13,146 ஆக உயர்ந்துள்ளது.

Corona

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 39,61,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1,43,834 ஆக அதிகரித்திருக்கிறது.

Also Read: கொரோனா:`1,077 பேருக்கு செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து!’ - பாசிட்டிவ் பகிரும் ஆக்ஸ்போர்டு



source https://www.vikatan.com/news/general-news/21-07-2020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக