Ad

திங்கள், 20 ஜூலை, 2020

திருச்சி: அடித்துக் கொல்லப்பட்டாரா? - காவிரி ஆற்றங்கரையில் எரிந்தநிலையில் பெண் சடலம்

முக்கொம்பு அருகே 40 வயது மதிக்கத்தக்கப் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடல் முழுவதும் எரிந்த நிலையில், பல இடங்களில் காயங்கள் இருப்பதால், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது இந்த விவகாரம். அந்தப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டரா என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மமான முறையில் இறந்த பெண்

திருச்சியின் முக்கிய சுற்றுலாத் தலமான முக்கொம்பு அருகே காவிரி ஆற்றின் கரையில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக ஹோட்டல் வைத்திருக்கும் பெண் ஒருவர், ஜீயபுரம் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலம் திருச்சி ஆமூரைச் சேர்ந்த கனகாம்புஜம் என்பது தெரியவந்ததுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள (எஸ்.ஆர்.சி) தனியார் கல்லூரியில் உள்ள கேன்டினில் சமையல்காரராகப் பணிபுரிகிறார்.

Also Read: கும்பகோணம்: 7 மணிநேர ஸ்விட்ச் ஆஃப்; 4 மாத தேடுதல்! - கொலை வழக்கில் சிக்கிய 5 இளைஞர்கள்

இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. இவர் கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அடித்து கொலை செய்து எரித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஜீயபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அய்யாரப்பன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் அய்யாரப்பன். ``திருச்சி மாவட்டத்தில் தீக்குளித்து இறக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அதவத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி தீக்குளித்து இறந்துபோனார். அது கொலையா, தற்கொலையா என்று இன்று வரையிலும் போலீஸார் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் அண்ணன் முறையான ஒரு பையனைத் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதியப்பட்டு விசாரித்து வருகின்றனர். இன்றுவரையிலும் அந்த வழக்கின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் கனகாம்புஜம் என்ற அம்மாவையும் எரிந்த நிலையில் கிடந்துள்ளார். அவர், பிரேதம் கிடந்த இடத்தில் எரித்தற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. போலீஸார் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். தற்கொலை செய்துகொள்வதாக இருந்தால், சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வசிப்பவர் முக்கொம்பு வந்து எதற்காகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்.

Also Read: சென்னை: 2 வது திருமணம்; தங்கையைப் பெண் கேட்ட ரவுடி! - அம்மிக் கல்லால் கொலை செய்த அண்ணன்

அவரது உடல் முழுவதும் காயங்கள் நிறைந்திருக்கிறது. இது போன்று பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இது கொலையா அல்லது வேறுவித காரணமா என்று முழுமையாகத் தெரியவில்லை. போலீஸார் இவ்வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிஉலகத்திற்குக் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

முக்கொம்பு காவிரி ஆறு

இவ்வழக்கை விசாரித்துவரும் டி.எஸ்.பி கோகிலாவிடம் பேசினோம். ``முக்கொம்பு அருகே காவிரி ஆற்றுப்பகுதியில் பெண் சடலம் கிடப்பதாக ஒரு பெண் தகவல் அளித்தார். அதன் பேரில் விசாரித்து வருகிறோம். முதல்கட்ட விசாரணையில் அந்த அம்மா நின்றுகொண்டே மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்திருப்பார் போல் தெரிகிறது. முழுமையாக இதுகுறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்ததும் முழுமையாகப் பேசுகிறோம்" என்று முடித்துக்கொண்டார்.



source https://www.vikatan.com/news/crime/police-recovers-burnt-female-body-in-trichy-cauvery-river-bank

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக