Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

``கெளதம் மேனன் படத்துல வில்லனும் செம அழகன்தான்!''- ஹீரோ டு வில்லன் கிருஷ்ணா

'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்துக்குள்ள நீங்க எப்படி போனீங்க?

கிருஷ்ணா

''கெளதம் மேனன் சாரை பல வருஷமா தெரியும். என்னோட நண்பன் செந்தில் வீராசாமி, கெளதம்கிட்ட இணை இயக்குநரா இருந்தார். நண்பனைப் பார்க்கப் போற சாக்குல கெளதம் சாரை அடிக்கடி பார்த்து பேசிட்டு வருவேன். எப்போதாவது இவரோட படத்துல நடிக்க கூப்பிடுவார்னு நம்பிக்கையா இருந்தேன். எப்போ, எங்கே பார்த்தாலும் கேட்டுக்கிட்டே இருப்பேன். 'நிச்சயமா பண்ணலாம்டா'னு சொல்லுவார். ஒருநாள் போன் பண்ணி 'மீட் பண்ணணும் வா'னு கூப்பிட்டார். போனா, கதை சொல்ல ஆரம்பிச்சார். 'சார், நீங்க கதைலாம் சொல்லணுமா, என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லுங்கனு'னேன். 'வில்லன் கேரக்டர் பண்ணணும்'னார். 'உங்களை நம்பி வரேன் சார். நீங்க நல்லா பார்த்துக்குவீங்கனு நம்பிக்கை இருக்குனு'னேன். 'தேங்ஸ் டா'னு சொல்லி கட்டிப்பிடிச்சார். எப்போ அவரைப் பார்த்தாலும் ஒரு ஃபேமிலி வைப் கொடுப்பார். சினிமா பற்றி பேசுனதை விடவும் மற்ற விஷயங்கள் பற்றி பேசுனதுதான் அதிகம். என்னை அவர் சகோதரனாப் பார்க்குறார். பெரிய மரியாதை அவர் மேல இருக்கு. இது எப்போவும் மாறதாது. ட்விட்டர்ல பிரதர்னு சொல்லி டேக் பண்ணியிருந்தார். இதைப் பார்த்து கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன். ''

வில்லன் ரகசியத்தை நீங்க வெளியே சொல்லவேயில்லையே?

ஜோஷ்வா இமை போல் காக்க

''கெளதம் சார் படத்துல, 'வில்லன் கேரக்டர்ல நடிக்கப் போறேன்'னு என் அண்ணன் விஷ்ணுகிட்ட மட்டும்தான் சொன்னேன். செம ஹேப்பியா ஃபீல் பண்ணான். 'நிபுணன்' படத்துல வில்லன் ரோல்ல நடிச்சிருப்பேன். அந்தக் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது பண்ணேன். 'ஜோஷ்வா இமை போல் காக்க' பொருத்தவரைக்கும் கதைகூட கேட்காம ஒகே சொன்னதுக்கு காரணம் கெளதம் சார். அதே மாதிரி இந்தப் படம் பற்றி யார்கிட்டயுமே சொல்லலை. யாராவது, 'அடுத்து என்னென்னப் படங்கள் பண்றீங்கனு' கேட்டாகூட 'ஜோஷ்வா' படம் பற்றி வாயை திறக்கமா இருந்தேன். இப்போ, ட்ரெய்லர் ரிலீஸூக்கு பிறகு நிறைய மெசேஜ் வருது. பார்க்கவே ஹேப்பியா இருக்கு.''

கெளதமோட பல்ஸ் புரிஞ்சிக்கிட்டு நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?

''இந்தப் படத்தோட முதல் நாள் ஷூட்டிங்கின்போது கொஞ்சம் தயக்கமா இருந்தது. எப்படி நடிக்கணும்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். 'சார், இப்படி பண்ணட்டுமா... இந்த ரியாக்‌ஷன் போதுமா..?'னு கெளதம்கிட்ட கேட்டா, 'எப்படி பண்ணனும்னு தோணுதோ... அப்படி பண்ணு கிருஷ்ணா. எனக்கு வேற பாடி லாங்குவேஜ் வேணும்னா சொல்றேன்'னார். 'ஆஹா... இப்படியொரு டைரக்டரா'னு குஷியாகிட்டேன். ஒரு ஆர்டிஸ்ட்டுக்கு எந்தளவுக்கு ஸ்பேஸ் கொடுக்கணுமோ அதைத் தவறாம கொடுத்துடுவார். முதல் ஷாட்டின்போது பெரிய கரெக்‌ஷன் எதுவும் சொல்லல. அப்புறம், கெளதமோட பல்ஸ் தெரிஞ்சிக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரியே நானும் வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன். படம் பொருத்தவரைக்கும் ஒரு செம லுக் எனக்கு கொடுத்திருக்கார். படத்தோட ட்ரெய்லர் பார்த்துட்டு, 'சார் என்னையும் செமயா காட்டியிருக்கீங்க. நீங்க யாருக்கு ஃப்ரேம் வெச்சாலும் நல்லா அழகா காட்டிருவீங்க. நானும் அழகா இருக்கேனே'னு சொன்னேன். சிரிச்சிக்கிட்டே, 'டோன்ட் பி சில்லி'னு சொல்லிட்டார்.

நான் கொஞ்சம் கச்சாமுச்சானுதான் ஸ்பாட்டுக்குப் போனேன். மும்பைல இருந்து ஸ்டைலிஸ்ட் வந்திருந்தாங்க. டிங்கரிங் வேலையெல்லாம் பண்ணாங்க. எல்லாம் முடிச்சிட்டு, 'எப்படி இருக்கு சார்'னு கேட்டேன். 'சூப்பர் டா, காதுல இருக்குற கடுக்கண் மட்டும் கழட்டிட முடியுமா'னு கேட்டார். 'டன் சார், வேண்டாம்னா காதோடயே பிச்சு போட்டிருவேன்'னு சொன்னேன். என் கேரக்டரை நல்லா உருவாக்குனார். படத்துல ஒரு ரெளடி பையனா நடிச்சிருக்கேன். படத்தோட ஹீரோ வருணும் நானும் மாறி மாறி அடிச்சிக்கிட்டே இருப்போம். ரொம்ப சார்மிங்கான, உயரமான, ஹல்க்கான பையன் வருண். ஸ்பாட்ல பெருசா வந்து நிப்பார். என்னைப் பார்த்து 'அண்ணா'னு கூப்பிடுவார். 'உன்னையே அண்ணாந்து பார்த்துதான் பேசுறேன்டா... கிருஷ்ணானு கூப்பிடு'னு சொல்லுவேன்.''

Also Read: "இன்னும் எவ்வளவுதான் வட்டி கட்டமுடியும்?" - 'மாஸ்டர்' விநியோகஸ்தர் புலம்பல் பின்னணி!

சினிமாவுக்கு வந்த 10 வருஷத்துல நிறைய ஏற்ற இறக்கங்கள் பார்த்திருக்கீங்க... உங்க கரியர் பற்றி சொல்லுங்க?

கிருஷ்ணா

''சினிமாவைத்தாண்டி வேற எதுவும் தெரியாது. இங்கே, வரலைனா வேற என்ன பண்ணியிருப்பேன்னு தெரியல. சினிமாவுக்கு லேட்டா வந்துட்டேன். கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கலாம். ஏன்னா, சீக்கிரம் சில தவறுகளை செஞ்சிட்டு புரிஞ்சிக்கிட்டு மாத்தியிருப்பேன். ஒரு 10 ஸ்டேப் அட்வான்ஸா அடியெடுத்து வெச்சிருப்பேன். இப்போ கொஞ்சம் பின்னாடி இருக்கமோன்னு ஒரு சின்ன வருத்தம். நிறைய ஏற்ற, இறங்கங்கள் இருந்திருக்கு. மேலேயே இருந்திருந்தா வாழ்க்கையோட சுவாரஸ்யம் தெரியாம போயிருக்கும். அதனால, எல்லாம் சரியா நடக்குதுனு நினைக்குறேன். ''

நீங்க தவறவிட்ட படங்கள் பற்றி சொல்லுங்க?

ஆரண்யகாண்டம்

"எக்கசக்கமா இருக்கு. நான் நடிக்கணும்னு ஆசைப்பட்ட பல படங்கள் என் கையே விட்டுப் போயிருக்கு. நான் வேண்டாம்னு சொல்லி மத்த ஆர்டிஸ்ட்டுக்குப் போன படங்களும் இருக்கு. ஆனா, 'சே, இதை விட்டுட்டோமே'னு ஃபீல் பண்ற படம் 'ஆரண்யகாண்டம்'. நானும், குமாரராஜாவும் காலேஜ்ல இருந்து நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவன் முதல்ல என்கிட்டதான் 'சம்பத்' கேரக்டர்ல நடிக்கக் கேட்டான். 'பண்றேன்'னு சொல்லிட்டேன். அப்போ, என்னோட 'அலிபாபா' படம் ஓடல. அதனால, புரொடியூஸர் எஸ்.பி.பி சரண் 'வேண்டாம் மச்சான்'னு சொன்னான். வியாபார ரீதியா சரண் சொன்னது சரியா இருந்தது. அதனால மனசை தேத்திக்கிட்டு விட்டுட்டேன்.''



source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-krishna-about-his-new-changeover-for-director-gautham-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக