Ad

சனி, 6 ஆகஸ்ட், 2022

India at CWG, Day 9 Highlights: ஒரே நாளில் 14 பதக்கங்கள்! வரலாறு படைத்த அவினாஷ், பிரியங்கா, பவினா!

ஒன்பதாவது நாள் முடிவில் 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது இந்தியா!

Boxing - Men’s +92kg: சாகர் இறுதிப்போட்டிக்குப் தகுதி பெற்றார்!

காமன்வெல்த் வரலாற்றில் பாரா டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இது!

தங்கபதக்கம் வென்றார் பவினா படேல்!

Para Table Tennis Women’s singles classes 3-5 : இறுதிப்போட்டியில் 3-0 என்ற நேர் செட் கணக்கில் பவினா படேல் வெற்றி!

ரோஹித் டோகாஸிற்கு வெண்கலம்!

Boxing - Men’s 67kg: ரோஹித் டோகாஸ் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் பெறுவார்!

Women's hammer throw - மஞ்சு பாலா 12வது இடம்பிடித்தார்!

சோனால் பென் பட்டேல் வெள்ளிப் பதக்கம் வென்றார்!

Para table tennis - Women's Singles: வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சோனால் பென் பட்டேல் வெற்றி!

Badminton - Men's doubles: சாத்விக் - சிராக் ஜோடி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி!

பதக்கத்தை உறுதி செய்தது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி!

அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய ஹாக்கி அணி.

இந்திய மல்யுத்த வீரர்கள் அபாரம்!

இந்தியா சார்பாக மல்யுத்தத்தில் 12 பிரிவுகளில் 12 பேர் பங்கேற்றனர். தற்போது பங்கேற்ற 12 வீரர்களும் பதக்கம் வென்று 2018 காமன்வெல்த்தில் நிகழ்த்திய சாதனையை மீண்டும் நிகழ்த்தியுள்ளனர்!

இந்திய வீரர்கள் பெற்ற 12 பதக்கங்கள்:

6 1 5

மல்யுத்தத்தில் 12வது பதக்கம்!

Wrestling - Men's 97 kg: வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வெற்றி பெற்றார் தீபக் நெஹ்ரா!

முகமது ஹுஸாமுதின் வெண்கலப் பதக்கம் வென்றார்!

Boxing, Men’s 57kg: அரையிறுதியில் முகமது அதிர்ச்சி தோல்வி!

மல்யுத்தத்தில் 11வது பதக்கம்!

Wrestling - Women's 76 kg: வெண்கலப் பதக்கதுக்கான போட்டியில் 11-0 என்ற புள்ளி கணக்கில் பூஜா சிஹாக் வெற்றி!

Badminton Women’s Doubles : காயத்ரி - த்ரீசா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்று அபாரம்!

Para Table Tennis Men’s singles classes 3-5 : ராஜ் அலகார் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோல்வி!

மல்யுத்தத்தில் ஆறாவது தங்கப்பதக்கம்!

Wrestling - Men's 74 kg : இறுதிப்போட்டியை 9-0 என்ற புள்ளி கணக்கில் வென்று தங்கப்பதக்கம் வென்றார் நவீன்!

ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் 2 இந்திய வீரர்கள்!

Badminton Men’s Singles: லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிதிக்கு தகுதி!

கடைசி மூன்று காமன்வெல்த்தில் தொடர்ந்து மூன்று தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார் வினேஷ் போகத்!

2014 -

2018 -

2022 -

இந்த சாதனையை காமன்வெல்த் வரலாற்றில் செய்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்!

மல்யுத்தத்தில் ஐந்தாவது தங்கப்பதக்கம்!

Wrestling Women's 53 kg: இந்த பிரிவில் மொத்தம் நான்கு வீராங்கனைகள்தான் என்பதால் ரவுண்டு ராபின் முறை பின்பற்றப்பட்டது. அதில் பங்கேற்ற மூணு போட்டிகளிலும் வென்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் வினேஷ் போகத்!

மல்யுத்தத்தில் நான்காவது தங்கப்பதக்கம்!

Wrestling Men's 57 kg - ரவி குமார் இறுதிப்போட்டியில் 10-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்!

மல்யுத்தத்தில் இன்று முதல் பதக்கம்!

Wrestling Women's 50 kg - பூஜா கேலோத் வெண்கலப் பதக்கம் வென்றார்!

டேபிள் டென்னிஸில் பெண்கள் இரட்டையர் பிரிவின் பயணம் முடிவுக்கு வந்தது!

Table Tennis, women’s doubles: மணிக்கா - தீயா ஜோடியும் ஸ்ரீஜா - ரீத் ஜோடியும் காலிறுதியில் தோல்வி.

குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றார் ஜெய்ஸ்மின்!

Boxing, women’s 60kg : அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றார் ஜெய்ஸ்மின்!

Squash - mixed doubles: சவுரவ் கோஷல் - தீபிகா பலிக்கல் ஜோடி அரையிறுதியில் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுவார்கள்!

Boxing, Women’s 50kg: நிக்கத் சரீன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

டேபில் டென்னிஸில் மற்றொரு பதக்கம் உறுதி!

Table tennis Mixed Doubles: ஷரத் கமல் - ஸ்ரீஜா அக்குலா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி!

லான் பவுல்ஸில் இரண்டாவது பதக்கம்!

Lawn bowls - Men's fours: இறுதிப்போட்டியில் 5-18 என்ற புள்ளி கணக்கில் வட அயர்லாந்திடம் இந்தியா தோல்வி. இதனால் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது!

பதக்கத்தை உறுதி செய்தது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி!

இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. இதன்மூலம் இந்தியாவிற்கு பதக்கம் உறுதியாகியுள்ளது!

இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதி!

Table tennis Men's Doubles: தமிழக ஜோடியான சத்யன் - ஷரத் அரையிறுதியில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி!

Table Tennis Women’s singles: ஸ்ரீஜா அக்குலா அரையிறுதியில் 3-4 என்ற செட் கணக்கில் தோல்வி!

அரையிறுதியில் பி.வி சிந்து!

Badminton - Women's singles: காலிறுதியில் மலேசியாவின் ஜின் வெய் கோவை எதிர்கொண்ட பி.வி.சிந்து 19-21, 21-14, 21-18 என்ற கணக்கில் வெற்றி! முதல் செட்டில் தோத்தாலும் அடுத்த இரண்டு செட்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றார் சிந்து!

Wrestling - Women's 50 kg: அரையிறுதியில் பூஜா கேலோத் 6-9 என்ற புள்ளி கணக்கில் தோல்வி!

மல்யுத்தத்தில் எட்டாவது பதக்கம் உறுதி!

Wrestling - Men's 57 kg: ரவி குமார் 14-4 என்ற கணக்கில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் ரவிக்கு பதக்கம் உறுதியானது

Women's Cricket: இந்தியா vs இங்கிலாந்து (அரையிறுதி)

முதலில் பேட் செய்த இந்தியா அணி 164 ரன்கள் குவிப்பு. அதிகபட்சமாக ஸ்ம்ரிதி 61 ரன்களையும் ஜெமிமாஹ் 44 ரன்களும் எடுத்தனர்!

Wrestling - Men's 97 kg: தீபக் நெஹ்ரா காலிறுதியில் தோல்வி!

மல்யுத்தத்தில் மற்றொரு பதக்கம் உறுதி!

Wrestling - Men's 74 kg: நவீன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார்!

Wrestling - Women's 76 kg: பூஜா சிஹாக் அரையிறுதியில் தோல்வி!

Wrestling - Men's 57 kg: ரவி குமார் 74 நொடிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

வெள்ளிப் பதக்கத்துடன் பிரியங்கா கோஸ்வாமி!

Women's 4 x 100m relay: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது!

கடைசி ஆறு காமன்வெல்த் தொடர்களிலும் 3000m steeplechase-ல் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்து பதக்கங்களையும் கென்யாவை சேர்ந்த வீரர்கள் வாங்கி வந்தனர்! இப்போது அதுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இந்தியாவின் அவினாஷ் சாப்லே!

தடகளத்தில் இந்தியாவிற்கு நான்காவது பதக்கம்!

Men’s 3000m Steeplechase: வெள்ளிப் பதக்கம் வென்றார் அவினாஷ் முகுந்த் சாப்லே!

0.05 நொடிகளில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார் அவினாஷ்!

காமன்வெலத் வரலாற்றில் 3000m steeplechase போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இது!

Table Tennis Men’s singles - சத்யன் ஞானசேகரன் காலிறுதியில் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Table Tennis Men’s singles - சனில் ஷெட்டி காலிறுதியில் 1-4 என்ற கணக்கில் தோல்வி!

Women's Women's 76 kg: பூஜா சிஹக் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling Men's 74 kg - நவீன் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Women's Freestyle 76 kg: பூஜா சிஹக் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling, women’s 53kg: இரண்டாவது போட்டியிலும் வினேஷ் போகத் வெற்றி! இன்னும் ஒரு போட்டியில் வென்றால் தங்கப்பதக்கம் கிடைக்கும்!

காமன்வெல்த் வரலாற்றில் Race walk-ல் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் பிரியங்கா!

இந்தியாவுக்கு 27வது பதக்கம்!

வரலாறு படைத்தார் பிரியங்கா!

Women's 10 km Race walk: 43:38.82 நிமிடத்தில் 10கிமீ தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரியங்கா!

Men’s Boxing - 48kg-51kg: அமித் பங்கல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்!

Athletics - women’s 10 km race walk: 7 கிலோமீட்டர் முடிவில் இந்தியாவின் பிரியங்கா மூன்றாவது இடம்.

Wrestling, Men's 74kg: நவீன் சிஹக் 13-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling, women’s 50kg: பூஜா கேலோத் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Boxing, Women’s 48kg: நீத்து கன்காஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்!

Wrestling, women’s 53kg: முதல் போட்டியில் வினேஷ் போகட் 36 நொடிகளில் வெற்றி!

Table tennis Men's singles: தமிழக வீரர் ஷரத் கமல் காலிறுதியில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்!

Table tennis Women's doubles: ஸ்ரீஜா-ரீத் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Table tennis Women's doubles: மணிக்கா - தீயா ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!



source https://sports.vikatan.com/sports-news/india-at-cwg-day-9-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக