Ad

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

India at CWG, Day 6 Highlights: ஒரே நாளில் 5 பதக்கங்கள்! தடகளத்தில் முதல் பதக்கம்! சவுரவ் கோஷல் வரலாறு படைத்தார்!

ஆறாவது நாள் முடிவில் 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில உள்ளது!

Boxing - men’s 80kg: ஆஷிஷ் குமார் காலிறுதியில் தோல்வி!

Shot put - Women's : இறுதிப்போட்டியில் மன்ப்ரீத் கவுர் கடைசி இடம் பிடித்தார்!

இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது!

பார்படோசுக்கு எதிரான கடைசி குரூப் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

வெண்கலப் பதக்கம் வென்றார் தேஜாஸ்வின் சங்கர்!

2.22மீ உயரம் தாண்டி இந்தியாவுக்கு தடகளத்தில் முதல் பதக்கம் பெற்று தந்துள்ளர்!

Boxing - Women's 70kg - ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா போர்கஹைன் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி!

Men's swimming 1500m freestyle: இறுதிப்போட்டியில் குஷ்கரா ராவத் ஏழாவது இடத்தையும் அத்வைத் பேஜ் எட்டாவது இடத்தையும் பிடித்தனர்!

பளுதூக்குதலில் பத்தாவது பதக்கம்!

Weightlifting - Men's 190+ kg: குருதீப் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்!

Women's cricket: இந்தியா 162 ரன்கள் குவிப்பு!

பார்படோசுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்துள்ளது! அதிகபட்சமாக ஜெமிமாஹ் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்!

Para table tennis - Women's singles Class 3-5: இரண்டாவது குரூப் போட்டியில் பவினா பட்டேல் மற்றும் சோனால் பட்டேல் வெற்றி!

குத்துச்சண்டையில் மூன்றாவது பதக்கம் உறுதி!

Women's boxing 50 kg: நிகத் சரீன் காலிறுதியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் உறுதியாகி உள்ளது!

ஜூடோவில் மூன்றாவது பதக்கம் கிடைத்தது!

Judo - Women +78 kg: துலிக்கா மான் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் வெள்ளி பதக்கம் பெற்றார்

Men's Squash - Singles: வெண்கலப் பதக்கம் வென்றார் சவுரவ் கோஷல்!

காமன்வெல்த் வரலாற்றில் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும்!

Men's Hockey: கனடாவை 8-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா!

குத்துச்சண்டையில் மற்றொரு பதக்கம் உறுதி!

Boxing - Men's 57 kg - முகம்மது ஹூசாமுதின் காலிறுதி போட்டியில் வெற்றி! இந்த வெற்றியின் மூலம் பதக்கத்தை உறுதிசெய்தார் ஹூசாமுதின்!

Para Table tennis - Men's Singles Classes 3-5: ராஜ் அலகர் முதல் போட்டியில் வெற்றி!

Women's hockey: இந்திய பெண்கள் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!

கனடாவிற்கு எதிராக நடந்த கடைசி லீக் போட்டியில் 3-2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி !

இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் முதல் பதக்கம் உறுதியாகியுள்ளது!

Boxing - Women's 45-48kg: நீத்து காலிறுதியில் வெற்றி! இந்த வெற்றி மூலம் நீத்துவிற்கு பதக்கம் உறுதியாகியுள்ளது!

Squash - Women's Singles Plate: பாதிக்கமில்லாத இறுதிப்போட்டியில் சுனைனா குருவில்லா வெற்றி!

இந்தியாவுக்கு ஜூடோவில் மூன்றாவது பதக்கம் உறுதி!

Judo - Women +78 kg: துலிக்கா மான் அரையிறுதிப் போட்டியில் வெற்றி!

Squash - Mixed doubles: ஜோஷ்னா சின்னப்பா - ஹரீந்தர் பால் சிங் ஜோடி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்!

Judo, Women +78 kg: துலிக்கா மான் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்!

Para table tennis - Women's singles: முதல் குரூப் போட்டியில் பவினா பட்டேல் மற்றும் சோனால் பட்டேல் வெற்றி!

Judo Men -100 kg : தீபக் தேஸ்வால் காலிறுதியில் தோல்வி!

Judo Men -100 kg : தீபக் தேஸ்வால் காலிறுதிக்கு தகுதிபெற்றார்!

பளுதூக்குதலில் மற்றொரு பதக்கம்!

ஆண்கள் 109 கிலோ பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார் லவ்பரீத் சிங்!

லவ்பரீத் சிங்! | Lovepreet Singh

அவர் வைத்த தேசிய சாதனையை அவரே முறியடித்துள்ளார்!

Snatch : 163kg (முன் - 162 kg)

C&J : 192kg (முன் - 188kg)

Total : 355 kg (முன் - 350kg)



source https://sports.vikatan.com/sports-news/india-at-cwg-day-6-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக