சுதந்திரம் தானாகக் கிடைத்து விடவில்லை. பலரின் போராட்டங்களும், நுட்பமான செயல்பாடுகளும் ஆங்கிலேயரை விரட்டியடிக்க காரணமாக இருந்தது.
போராட்டத்திற்கு முன்பும், சுதந்திரம் கிடைத்த பிறகும் இந்தியாவின் நிலை எப்படி இருந்தது, சுதந்திரத்துக்கு தன்னுடைய பங்களிப்பை அளித்தவர்கள் யார் என்பதை குறித்து விளக்கும் 10 புத்தகங்கள்…
நள்ளிரவில் சுதந்திரம் - லேரி காலின்ஸ் டொமினிக் லேப்பியர்: இந்திய சுதந்திரத்தின் போது வெடித்த வன்முறை, ஆங்கிலேய அரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஏற்பட்ட பதற்றம், நவீன இந்தியாவின் உருவாக்கம் போன்றவற்றை நுணுக்கமாக பதிவு செய்யும் புத்தகம்.
ஜாலியன்வாலா பாக் 1919: தி ரியல் ஸ்டோரி - கிஷ்வர் தேசாய்: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மிக கொடூர தாக்குதலில் ஒன்றான ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கும் புத்தகம்.
இந்தியாவின் இருண்ட காலம் - சசி தரூர்: தமிழில் ஜே. கே. இராஜசேகரன்: பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் காலம் இந்தியாவுக்கான இருண்ட காலம் என குறிப்பிட்டதோடு, இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசு என்பதை மறுத்து தெளிவான விளக்கங்கள், வரலாற்று தரவுகள் மற்றும் வாதங்களை முன்வைத்த புத்தகம்.
விடுதலை வேள்வியில் தமிழகம் - த. ஸ்டாலின் குணசேகரன்: இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் விடுதலை போராட்டம் குறித்து மொத்தமாக தொகுக்கப்பட்ட வரலாற்று நூல்.
இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - ராமச்சந்திர குஹா, தமிழில் ஆர். பி. சாரதி: சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா எந்த வகையில் எல்லாம் பிரச்னைகளை எதிர்கொண்டது என்பதை விளக்கும் புத்தகம்.
நவீன இந்தியாவின் சிற்பிகள் - ராமச்சந்திர குஹா, தமிழில் வி. கிருஷ்ணமூர்த்தி: நவீன இந்தியாவில் ஒரே நேரத்தில் வெவ்வேறான புரட்சிகள் நடந்தன. அந்த புரட்சிகளை மேற்கொண்ட தலைவர்களே நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள், இந்தியா என்றொரு தேசம் உருவானவதை எடுத்துரைக்கும் நூல்.
ஒரு தேசத்திற்கான கடிதங்கள், ஜவஹர்லால் நேருவிடம் அவருடைய முதலமைச்சர்களுக்கு… 1947 - 1963: நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான போது மாகாண அரசின் தலைவர்களுக்கு மாதத்திற்கு இருமுறை கடிதம் எழுதினார். இத்தொகுப்பு குடியுரிமை, போர் மற்றும் அமைதி, சட்டம் ஒழுங்கு, ஆட்சி மற்றும் ஊழல் போன்றவற்றை உள்ளடக்கியது.
மறைக்கப்பட்ட இந்தியா மற்றும் எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன்: இந்திய வரலாற்றில் அறியப்படாத தகவல்கள் மற்றும் உண்மைகளை எடுத்துரைக்கும் புத்தகம்.
சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய இராணுவம் - சிசிர் குமார் போஸ்: சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கட்டமைத்த ராணுவம், அதன் செயல்பாடுகளை விளக்கும் புத்தகம்.
அம்பேத்கர் இன்றும் என்றும் - விடியல் பதிப்பகம்: அம்பேத்கரின் அரசியல் பங்கெடுப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஏற்படுத்திய நம்பிக்கை போன்றவை குறித்த புத்தகம்.
இதுபோல நீங்கள் படித்த புத்தகங்கள், பிறர் படித்து அறிந்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் புத்தகங்களை குறிப்பிடவும்.
source https://www.vikatan.com/ampstories/government-and-politics/literature/10-books-to-know-about-indias-independence-history
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக