திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள மூலனூர் பகுதியில் மின் கம்பங்களை குறிப்பிட்டு `இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்... அச்சத்தில் மக்கள் - நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?!´எனும் தலைப்பில் கடந்த மார்ச் 30-ம் தேதி விகடனில் செய்தி ஒன்றை விகடன் வெளியிட்டிருந்தது.
ஆறு மாத காலமாக மின் கம்பங்கள் சரிசெய்யாமலும் மக்களின் கோரிக்கை ஏற்கப்படாமலும் இருந்த நிலையில், விகடனில் இந்தச் செய்தி வெளிவந்த அடுத்த நாளே முக்கியச் சாலையில் பழுதடைந்த மூன்று மின்கம்பங்களை அகற்றி, புது மின்கம்பங்களை மாற்றி அமைத்தது மூலனூர் மின்வாரியம்.
ஒரு வருட காலமாக ஒரே இடத்தில் இருந்த புதுக் கம்பங்களை தற்போது எடுக்கத் தொடங்கிருக்கிறது மூலனூர் மின்வாரியம். மூலனூர் பொதுமக்கள் `இனி நாங்கள் அச்சப்படாமல் வெளியே செல்வோம், எங்கள் கோரிக்கையை நிறைவு படுத்திய விகடனுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றனர்.
மேலும் மூலனூர் மின்வாரியம், `இது போன்ற தவறுகள் இனி நடக்காது’ என்றும், `இது போன்ற மின்கம்பங்களைச் சரிபார்த்து உடனே நடவடிக்கை எடுகிறோம்’ என்றும் கூறியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/after-vikatan-news-electrical-department-took-immediate-action-and-removed-damaged-ep-posts
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக