Ad

திங்கள், 20 ஜூலை, 2020

கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கு: ரித்தீஸ் கைது - உறவினர் மீது தாக்குதல்!

கோவை பேரூர், ஆறுமுகக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரித்தீஸ் (24). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, ரித்தீஸ், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரைக் காதலித்துள்ளார். இருவரும் 6 மாதங்களுக்கு மேலாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், வயது குறைவு என்பதாலும் அவர்களின் காதலுக்கு மாணவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாணவி

Also Read: `எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது!' - மாணவியைக் கொலைசெய்த கோவை இளைஞர்

மேலும், `படிக்கிற வயதில் காதல் எல்லாம் வேண்டாம்’ என மாணவியின் தந்தை அறிவுறுத்தியுள்ளார். இதனால், அந்த மாணவி, ரித்தீஸிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

ரித்தீஸ், `என்னிடம் பேசு’ என மாணவியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். கடந்த வாரம் மாணவியின் வீட்டுக்கே சென்ற ரித்தீஸ், `என்னிடம் பேசு. நாம் மீண்டும் காதலிக்கலாம். திருமணம் செய்துகொள்ளலாம்’ என்று கூறியுள்ளார். ஆனால் மாணவி, `எனக்கு இதில் விருப்பமில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த ரித்தீஸ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மாணவியை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

ரித்தீஸ்

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த மாணவியின் தந்தையையும் ரித்தீஸ் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். இதையடுத்து, இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில், மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழக்கவே, இதை கொலை வழக்காக மாற்றி ரித்தீஸை போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே, கோவைப்புதூர் அருகே கேரள வனப்பகுதியையொட்டிய பகுதியில் ரித்தீஸை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார், ``இந்தச் சம்பவம் நடந்தவுடனேயே ரித்தீஸ் கேரளாவில் உள்ள தன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், மாணவி இறந்துவிட்டதைத் தெரிந்து கொண்ட அவன், அங்கிருந்தும் எஸ்கேப்பாகி என்ன செய்வதென்று தெரியாமல் கோவை அருகே சுற்றி வந்தான்.

ரித்தீஸ் கைது

அப்போதுதான் நாங்கள் அவனைக் கைது செய்தோம். ரித்தீஸ் அந்த மாணவியைக் காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளன். அதனால், அவன் மீது போக்ஸோ பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றனர்.

கைது செய்யப்பட்ட ரித்தீஸை போலீஸார் பேரூர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதையடுத்து, ரித்தீஸை சிறையில் அடைப்பதற்கான பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ரித்தீஸின் உறவினரிடம் அவருக்கு, துணிகள் கொண்டு வர சொல்லியுள்ளனர். இதைத்தொடர்ந்து, ரித்தீஸின் உறவினர் ஒருவர் காவல்நிலையத்துக்கு துணி எடுத்து சென்றுள்ளார். அங்கு, கல்லூரி மாணவியின் உறவினர்கள், அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பிறகு, போலீஸார் வந்து ரித்தீஸின் உறவினரைக் காப்பாற்றினர்.

தாக்குதல்

தொடர்ந்து, `ரித்தீஸை தூக்கிலிட வேண்டும்’ என்று மாணவியின் உறவினர்கள் காவல்நிலையம் முன்பு கோஷம் எழுப்பினர். இதனால், சற்று நேரத்துக்கு அந்த இடம் பதற்றத்துடன் காணப்பட்டது. பிறகு, ரித்தீஸ் பலத்த பாதுகாப்புடன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-college-girl-murder-case-rithish-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக