Ad

ஞாயிறு, 12 ஜூலை, 2020

``இப்போ பிரியாணி வாசமெல்லாம் தெரியுது!" - கொரோனாவிலிருந்து மீண்ட மருத்துவர்

அந்த வகையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கும் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா, தன் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்தார்.

``ஒரு வாரம் ரொம்ப சோர்வா இருந்தேன். வாக்கிங் போகக்கூடப் பிடிக்கலை. `சரி, க்ளைமேட் மாறும்போது இப்படித்தானே உடம்பு சோர்வா இருக்கும், இது நார்மல்தானே'ன்னு விட்டுட்டேன். எனக்கு வேற எந்த அறிகுறியுமே இல்ல. கூலா இருந்தேன்.

அன்னிக்கு திங்கள்கிழமை. படுக்கையைவிட்டு எழுந்திரிக்கவே முடியலை. பக்கத்துல இருந்த செல்போனையே எடுக்க முடியலைன்னா பார்த்துக்கோங்க. என்னோட டாக்டர் ஃபிரெண்ட்ஸுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். `கொரோனா டெஸ்ட் எடுத்துடு'ன்னு சொன்னாங்க. நானும் எடுத்தேன். ரிசல்ட் எதிர்பார்த்த மாதிரியே பாசிட்டிவ். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அன்னிக்கு என் பிறந்தநாள்’’ என்கிறார் பூர்ண சந்திரிகா.

``கொரோனா வந்தா வீட்டு க்வாரன்டீனைவிட ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடணும் என்பதில் நான் தீர்மானமா இருந்தேன். ஏன்னா, நோய் ஏற்பட்ட முதல் வாரத்துலதான் ஏதாவது பிரச்னை வரலாம்னு தெரியும் என்பதால, வீட்டுல இருக்கவே வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். அதனால, ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே டிரெஸ்ஸை எல்லாம் எடுத்து பேக் பண்ணிட்டேன்.

ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம், கார்ப்பரேஷன்ல இருந்து ஆம்புலன்ஸ் வர நேரமானது. என் ரிசல்ட் தெரிஞ்ச என்னோட ஆட்டோ டிரைவர், 'நீங்களும் மாஸ்க் போட்டிருக்கீங்க, நானும் மாஸ்க் போட்டிருக்கேன். மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவோம். வாங்க டாக்டர் நானே ஜி.ஹெச்ல விடுறேன்'னு சொல்லி டிராப் பண்ணினார். அதுவே மனசுக்கு இதமா இருந்துச்சு.

அரசு மருத்துவமனை

அடுத்து ஹாஸ்பிட்டல் அனுபவம். `இப்போ நாம பேஷன்ட். சிகிச்சை தர்ற டாக்டரை 100% நம்பணும்'னு முடிவு பண்ணிட்டுத்தான் போனேன். அவங்க செஞ்ச டெஸ்ட்டுக்கெல்லாம் ஒத்துழைச்சேன். கொடுத்த மருந்துகளையெல்லாம் சாப்பிட்டேன்.

ஹாஸ்பிட்டல்ல ரெண்டே ரெண்டு கஷ்டத்தைத்தான் அனுபவிச்சேன். ஒண்ணு, காலையில 6 மணிக்கெல்லாம் தூங்கிட்டிருக்கிற என்னை எழுப்பி ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் லெவல் எல்லாம் செக் பண்ணுவாங்க. ரெண்டாவது, ஹாஸ்பிட்டல்ல நல்ல நல்ல சாப்பாடா கொடுத்தாங்க. பிரியாணிகூட கொடுத்தாங்க. அது எப்படிக் கஷ்டமாகும்னு கேட்கிறீங்களா? ஆனா, எனக்கு அதோட வாசனையும் தெரியலை, ருசியும் தெரியலையே. கண்ணால மட்டுமே அது பிரியாணின்னு ஃபீல் பண்ணி சாப்பிட்டேன்’’ என்றவர் சிரிக்கிறார்.

``நான் பேஷன்ட்டா இருந்துகிட்டே டாக்டர் வேலை பார்த்த சம்பவமும் நடந்துச்சு. பக்கத்து ரூம்ல இருந்த ஒருத்தவங்க ரொம்ப பயந்து, பதற்றமாகிட்டாங்க. `ஹார்ட் பீட் எல்லாம் படபடன்னு துடிக்குது டாக்டர்'னு அவங்க அலற, நானும் இன்னொரு டாக்டரும் சேர்ந்து அவங்களுக்கு கவுன்சலிங் கொடுத்தோம்.

அந்த டாக்டர், `எனக்கு வீஸிங் பிரச்னை இருந்தும் கொரோனா பேஷன்ட்ஸ் பார்த்துட்டுதான் இருக்கேன். ஒரு பயமும் இல்லம்மா’ன்னு அந்த லேடியை சமாதானப்படுத்தினார். நான், `பாரும்மா, நானும் உன்னை மாதிரியே கொரோனா பேஷன்ட்தான். நான் டாக்டரும்கூட. உன் பக்கத்து ரூம்லேயே இருக்கேன். உனக்கு எப்போ வேணும்னாலும் என்னைப் பார்க்கலாம்’னு சொன்னதும்தான் அந்த லேடி சமாதானமானாங்க.

Also Read: மதுரை: கொரோனா போண்டாவைத் தொடர்ந்து மாஸ்க்! - வரவேற்பால் மிரளும் ஹோட்டல்

ஒரு மனநல மருத்துவரா இருந்தாலுமே, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தப்போ எனக்கும் சில அன்பான பேச்சுகள் தேவைப்பட்டுச்சு. இதைப் புரிஞ்சுக்கிட்ட என் நண்பர்கள் தினமும் எனக்கு போன் பண்ணிப் பேசினாங்க. நான் நார்மலா இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டதும், `இன்னும் நீ போகலையா’ன்னு கலாட்டா, காமெடி எல்லாம் நடந்துச்சு.

ஒரு வாரத்துல கொரோனா நெகட்டிவ்னு ரிசல்ட் வந்துடுச்சு. இப்போ வீட்டு க்வாரன்டீன்ல இருக்கேன். ஃபிரெண்ட்ஸ், அக்கம் பக்கம் இருக்கிறவங்க எல்லாரும் விதவிதமா சமைச்சு அனுப்புறாங்க. சமூக இடைவெளியோடு அன்பை பரிமாறுறாங்க. மனசுக்குள்ள முன்னவிட ரொம்ப நெருக்கமா இருக்கோம்.

நேத்து மீன் குழம்பு வந்துச்சு, இன்னிக்கு கருவாட்டுக் குழம்பு வந்திருக்கு. இப்போ மூக்குல வாசனை, நாக்குல ருசி ரெண்டும் வந்துடுச்சு’’ என்று செம பாசிட்டிவ் எண்ட் கொடுக்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.



source https://www.vikatan.com/health/miscellaneous/psychiatrist-poorna-chandrika-shares-her-experience-as-a-covid-19-patient

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக