Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

கொரோனா: `தடமறியாமல் எந்த நாடும் கட்டுப்படுத்த முடியாது’ - உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றரை கோடியை நெருங்கவுள்ளது. சீனாவின் வுகான் நகரில் வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போதுவரை வைரஸின் அறிகுறிகளைப் பொறுத்தே மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் தடமறியாமல் எந்த நாடாலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா

ஜெனிவாவில் உள்ள WHO-வின் தலைமை அலுவலகத்தில் வீடியோ மூலம் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், ``கோவிட் 19-ல் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஏழை மக்களும் பழங்குடி மக்களும் ஆபத்தில் உள்ளனர். உலகளவில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் 500 மில்லியனுக்கும் அதிகமாகப் பழங்குடி மக்கள் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் தொற்று நோய்கள் ஆகியவை பழங்குடி மக்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. பழங்குடி மக்களுக்கு இடையே பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது” எனப் பேசியுள்ள அவர் தொடர்ந்து,

Also Read: `கோவிட்-19 வைரஸ் காற்று மூலம் பரவலாம்!’ - ஒப்புக்கொண்ட உலக சுகாதார நிறுவனம்

``நாங்கள் பல முறை கூறியதை போல ஊரடங்கு அறிவிக்கப்படுவது, வைரஸ் பரவலைத் தடுக்குமே தவிர, அதை முழுவதுமாக அழிக்காது. எனவே, வைரஸ் பாசிட்டிவ் நபர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல் மிகவும் அவசியம். வைரஸ் எங்கு இருக்கிறது என்பதை முதலில் கண்டுப்பிடிக்காமல், எந்த நாடாலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது. அனைத்து நாட்டிலும் தொடர்பு தடமறிதல் மிகவும் முக்கியமானது. இது தனிப்பட்ட கேஸ்கள் நிறைய கேஸ்களாக மாறுவதைத் தடுக்கும். மேலும், அதன் மூலம் சமூக பரவல் உருவாவதை முன்னரே தடுக்கலாம்.

WHO - டெட்ரோஸ்

தொடர்பு தடமறிதலை முறையாகப் பின்பற்றினால் சமூக பரவலைக் கொண்டுள்ள நாடுகள் கூட தங்கள் தொற்றுகளை எளிமையாகக் கட்டுப்படுத்த முடியும். தற்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்படுவதால் அனைவரும் இதைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பெரியம்மை முதல் போலியோ, எபோலா, கோவிட் 19 வரை ஒரு வெடிப்பின் முக்கிய பகுதியாக இருப்பது தொடர்பு தடமறிதல்தான். எனவே, பாதிக்கப்பட்ட ஒருவரை தனிமைப்படுத்துவதோடு இல்லாமல், வைரஸ் பரவலின் தடம் நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி அனைத்து நாடுகளும் செய்தால் விரைவிலேயே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனா: `தவறான திசை; நிலைமை மேலும் மோசமடையும்!’ - எச்சரிக்கும் WHO



source https://www.vikatan.com/news/international/no-country-can-get-control-of-its-epidemic-if-it-doesnt-know-where-the-virus-is-who-said

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக