Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

`கீழடியில் ரூ.12 கோடியில் அகழ்வைப்பகம்!’ - காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர் #NowAtVikatan

கீழடியில் ரூ.12 கோடியில் அகழ்வைப்பகம்!

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை வைக்க அங்கு ரூ.12 கோடி மதிப்பீட்டில் அகழ்வைப்பகம் கட்டப்படுகிறது. இதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

கீழடி
கீழடி
கீழடி
கீழடி படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 கட்ட அகழாய்வுகள் முடிந்துள்ள நிலையில், 6ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், 5-ம் கட்ட அகழாய்வுப் பணியின்போது கிடைத்த பொருள்களை வைப்பதற்கு கீழடியில் ரூ.12 கோடியில் அகழ்வைப்பகம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, இன்று அடிக்கல் நாட்டி பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

Qகீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தற்போது நடைபெறுகிறது. இதனை முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்க உள்ளார். Live by Arunchinnadurai E.j.nandhakumar

Posted by Vikatan EMagazine on Sunday, July 19, 2020

Also Read: `கீழடி... கொந்தகை... அகரம்... மணலூர்..!' - சிவகங்கையில் விரிவடையும் அகழாய்வுப் பணிகள்

வெறிச்சோடிய ராமேஸ்வரம்!

ராமேஸ்வரம்

கொரோனா பரவல் எதிரொலி மற்றும் ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடத் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடற்கரைக்கு செல்வதைத் தடுக்க பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் இந்நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் ராமேஸ்வரம் கோயில் ரத வீதி மற்றும் அக்னி தீர்த்தக் கடற்கரை ஆகிய பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.



source https://www.vikatan.com/news/general-news/20-07-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக