Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

Corona Live Updates: உலக அளவில் 1.46 கோடி - இந்தியாவில் 11 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் 11 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,18,043 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 40,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 673 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,497 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,00,087 ஆகவும் உயர்ந்துள்ளது.

Also Read: கொரோனா: `தடுப்பு மருந்து ஆராய்ச்சியைக் குறிவைக்கும் உளவாளிகள்!’ - மறுக்கும் ரஷ்யா

கொரோனா - உலக நிலவரம்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,46,40,349ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 87,34,789 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,08,856 ஆக உயர்ந்துள்ளது.

Corona

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் ஒரேநாளில் 63,584 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை, 38,96,855 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1,43,269 ஆக அதிகரித்திருக்கிறது.

Also Read: பல்லுயிர்ச்சூழலை அழித்ததுதான் கொரோனா வைரஸ் உருவாகக் காரணமா? என்ன சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்?



source https://www.vikatan.com/news/general-news/20-07-2020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக