13 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில உள்ளது இந்தியா!
Women’s discus throw final: 2018 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற சீமா புனியா ஐந்தாவது இடம் பிடித்தார். நவ்ஜீத் கவுர் தில்லோன் எட்டாவது இடம் பிடித்தார்!
Badminton mixed team final: இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம்!
மலேசியாவிடம் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி!
நான்காவதாக நடந்த பெண்கள் இரட்டையர் போட்டியில் காயத்ரி - டிரீசா ஜோடி தோல்வி அடைந்தனர்!
Badminton mixed team final: மலேசியா 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் முன்னிலை!
மூன்றாவது போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் போராடி தோல்வி. அடுத்து பெண்கள் இரட்டையர் பிரிவில் காயத்ரி - டிரீசா ஜோடி களம் இறங்குகிறார்கள்!
Men's boxing - 67 kg: ரோஹித் டோகாஸ் காலிஇறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்!
Badminton mixed team final: பி.வி.சிந்து நேர் செட்களில் ஜின் வெய் கோ-வை வீழ்த்தினார்!
இரு நாடுகளும் ஒரு போட்டி வென்றுள்ள நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் விளையாட உள்ளார்!
Women’s Singles Plate: அரை இறுதியில் சுனன்யா சாரா குருவில்லா வெற்றி. பதக்கம் இல்லாத இறுதிப்போட்டியில் பங்குபெறுவார்!
Badminton mixed team final: மலேசியா 1-0 என்ற கணக்கில் இந்தியாவிடம் முன்னிலை!
முதல் போட்டியான ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் மற்றும் சிராக் ஜோடி தோல்வி! அடுத்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து ஜின் வெய் கோ-வை எதிர்கொள்கிறார்!
Men's squash: அரை இறுதிப்போட்டியில் சவுரவ் கோஷல் தோல்வி! இதனால் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் பங்குபெறுவார்!
Women's hockey: இங்கிலாந்து அணியிடம் இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி!
தங்கம் வென்றது ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி!
இறுதிப்போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி தங்கம் வென்றது சரத் கமல், சத்யன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி கூட்டணி!
வெள்ளிப்பதக்கம் வென்றார் விகாஷ் தாகூர்
ஆண்கள் 96 கிலோ பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் விகாஷ் தாகூர்!
Lawn Bowls-ல் தங்கம் வென்றது இந்தியா!
Lawn Bowls - Women's fours: தென்னாப்பிரிக்கா அணியை 17-10 என்ற கணக்கில் வீழித்தி வரலாறு படைத்தது இந்திய அணி!
Athletics Women’s 100m: டூட்டி சந்த் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை!
Swimming Men’s 1500m freestyle: இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்றில் அட்வைத் பேஜ் மற்றும் குஷ்கரா ராவத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்!
Lawn Bowls - Women's fours: ஐந்து எண்டுகள் முடிவில் 4-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை!
Lawn Bowls - Women's fours: தென்னாப்ரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டி தொடங்கியது!
Women’s Shot put: இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஏழாவது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் மன்ப்ரீட் கவுர்!
Swimming 200m Backstroke: இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்றில் ஸ்ரீஹரி நடராஜ் எட்டாவது இடம்பிடித்தார். 2:00.84 நிமிடத்தில் போட்டியை முடித்து தேசிய சாதனை படைத்தார் ஸ்ரீஹரி!
Weightlifting - women’s 76kg: Clean & Jerk சுற்றின் மூன்று முயற்சிகளிலும் பளுதூக்கத் தவறிவிட்டார் பூனம் யாதவ்!
2018ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த பூனம் யாதாவிற்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது!
Men's Long jump: முஹம்மது அனீஸ் யாஹியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!
Men's Long Jump: முதல் ஆளாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற முரளி ஸ்ரீசங்கர்!
ஆண்கள் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர். தகுதி பெற 8 மீட்டருக்கு மேல் தாண்ட வேண்டும் என்ற நிலையில், முதல் முயற்சியிலேயே 8.05 மீட்டர் தாண்டினார் முரளி ஸ்ரீசங்கர்!
source https://sports.vikatan.com/sports-news/india-at-commonwealth-games-day-5-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக