Ad

புதன், 15 ஜூலை, 2020

சாத்தான்குளம்: சி.பி.ஐ விசாரணைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவர் அழைப்பு! #NowAtVikatan

சாத்தான்குளம்: சி.பி.ஐ சம்மன்!

சி.பி.ஐ

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை தொடர்பாகத் தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் மனித உரிமை ஆணைய துணை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதில் டாக்டர் வினிலா, கோவில்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ், கோவில்பட்டி கிளைச்சிறை கண்காணிப்பாளர் சங்கர், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர், தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகியுள்ளனர்.

Also Read: சாத்தான்குளம்: `நள்ளிரவில் முத்துராஜுடன் தூத்துக்குடி பறந்த சி.பி.ஐ’ -சூடுபிடிக்கும் விசாரணை

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்!

பாடப்புத்தகங்களுடன் மாணவிகள்

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளியில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அந்தந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மாணவ மாணவிகள் நேரடியாகச் சென்று புத்தகங்களைப் பெற்று வருகிறார்கள்.

அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை!

`தமிழகத்தில் மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் கடைப்பிடித்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்’ என அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார். சமூக வலைதளங்களில் சில மதங்களுக்கு இடையே மோதலை விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/general-news/15-07-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக