Ad

வெள்ளி, 10 ஜூலை, 2020

இந்தியாவின் பாதுகாப்புக்காக சேது சமுத்திரத் திட்டம் வேண்டும்! பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம் #NowAtVikatan

இந்தியாவின் பாதுகாப்புக்காக சேது சமுத்திரத் திட்டம் வேண்டும்!

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலு பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், `இந்தியாவின் சர்வதேச கப்பல் போக்குவரத்து மட்டுமல்லாமல், தேசப் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, சேது கால்வாய் பாதை மத்திய அரசின் திறம்வாய்ந்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், தனது முழுமையான ஆய்வின் அடிப்படையில் ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்துக்கு சேதம் ஏதுமின்றி, ஏற்கெனவே தேர்வு செய்த வழித்தடத்தில், சேது சமுத்திரத் திட்டப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட வடிவமைப்பின்படி இந்திய துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களில் 65 சதவிகிதம் கப்பல்கள் திட்டவசதிகளைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ராமர் பாலத்துக்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டம் என்கிறார் நிதின் கட்காரி!

பிரதமர் மோடி

மேலும், ``இந்தியாவின் பாதுகாப்புக் கருதி, தமிழர்களின் 150 ஆண்டுக்கால சேது சமுத்திரக் கனவுத் திட்டத்தை 2024-ம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு முன்னதாகவே நிறைவேற்றி, தமிழக மக்களின் மனதில் நீங்கா இடத்தை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பெற வேண்டும் எனத் தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார். சேது சமுத்திரத் திட்டத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆதரவு தெரிவித்ததையும் டி.ஆர்.பாலு, தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/general-news/10-07-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக