Ad

திங்கள், 20 ஜூலை, 2020

மருத்துவமனையிலிருந்து எஸ்கேப்; குடும்பத்துடன் சண்டை! கோவை கோயில்களை சேதப்படுத்திய கஜேந்திரன்

கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியது, 3 கோயில்கள் முன்பு டயர் எரித்து சேதப்படுத்திய சம்வங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த விவகாரங்கள் தொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கோயில் சேதம்

Also Read: கோவை: நேற்று பெரியார் சிலை; இன்று இந்துக் கோயில்கள்! - அடுத்தடுத்த அதிர்ச்சி

பெரியார் சிலை மீது சாயம் ஊற்றிய வழக்கில், பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் போலீஸில் சரணடைந்தார். கோயில் முன்பு ஒரு மர்ம நபர், டயர் எரித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தது.

இதுதொடர்பாக கஜேந்திரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``சேலம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (48), குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டை போடுவார். அப்படிச் சண்டை போடும்போது, பொருள்களை எரிக்கும் பழக்கதைக் கொண்டவர். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார்.

கஜேந்திரன்

கடந்த 14-ம் தேதி மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளார். அங்கிருந்து சேலம் சென்றவர், மீண்டும் குடும்பத்தினருடன் சண்டை போட்டுவிட்டு, அவர்களது வீட்டின் முன்பு சில பொருள்களை எரித்துள்ளார். பின்பு, கோவை வந்த அவர், சாலையில் நின்ற ஒரு டி.வி.எஸ் வண்டியை எடுத்து சுற்றியுள்ளார்.

Also Read: கோவை: நேற்று பெரியார் சிலை; இன்று இந்துக் கோயில்கள்! - அடுத்தடுத்த அதிர்ச்சி

கோயில்களின் முன்பு டயர் வைத்து எரித்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், அவர் எந்த கட்சி மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டோம்” என்று கூறினர்.

ஆணையாளர் கருத்து

இதனிடையே,கோவையில் கோயில்கள் சேதப்படுத்தியது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அதன் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணனை தொடர்புப்படுத்தி கருத்து தெரிவித்தற்காக, பி.ஜே.பி மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது த.பெ.தி.க சார்பில் கோவை ஆணையாளரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/details-about-gajendran-who-arrested-for-damaging-temples-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக