Ad

திங்கள், 20 ஜூலை, 2020

`ஊரடங்கிலும் குளங்கள் பராமரிப்பு; மரங்கள் நடவு!’ - அசத்தும் நெல்லை இளைஞர்கள்

நெல்லையைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருங்கிணைந்து ஐந்திணை என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்திச் செயல்பட்டுவரும் இந்த அமைப்பினர், சைக்கிளில் சென்று குளங்களை ஆய்வு செய்வது, மரக்கன்றுகளை நடவு செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார்கள். 

Also Read: உலக சுற்றுச்சூழல் தினத்தன்று நாம் ஏற்கவேண்டிய உறுதிமொழி என்ன?

கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் அனைத்தும் முடங்கிப் போயிருக்கும் நிலையிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

Also Read: ``சுற்றுச்சூழல் கெடுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே!"-  பூவுலகு சுந்தரராஜன்

பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வேய்ந்தான்குளம், சில மாதங்களுக்கு முன்பு தன்னார்வலர்களின் உதவியுடன் தூர்வாரப்பட்டுக் கரைகள் பலப்படுத்தப்பட்டன. அத்துடன், கரைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. 

ஐந்திணை நண்பர்கள் குழுவினர்

குளத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுவிடாத வகையில் கரையைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் ஐந்திணை இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற மரக்கன்றுகளைத் தேர்வு செய்து நடவு செய்கிறார்கள்.

வேய்ந்தான்குளத்தின் கரையில் ஏற்கெனவே வசனைத் திரவியத்துக்குப் பயன்படும் வெட்டிவேர் மற்றும் பனை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நடவு செய்யப்பட்டிருந்தன. அவற்றின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ததுடன் புதிதாக மரக்கன்றுகளை நடவு செய்தனர். 

நடப்பட்ட மரக்கன்று

ஐந்திணை அமைப்பின் செயலாளரான ஹரிபிரதான் கூறுகையில், ``சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒவ்வொருவரும் பங்களிப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்கிறோம். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், அருகில் உள்ள குளங்களில் மரக்கன்றுகளை நடவுசெய்கிறோம். அவற்றைப் பராமரிக்கும் பணியிலும் தீவிரம் காட்டுகிறோம்” என்றார்.



source https://www.vikatan.com/news/environment/tirunelveli-youths-plant-tress-near-ponds

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக