Ad

வியாழன், 16 ஜூலை, 2020

`அமைதியை நிலைநாட்ட விரும்புகிறேன்!' - இந்திய, சீன விவகாரத்தில் ட்ரம்ப்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக எல்லைப் பிரச்னை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இரண்டு தரப்பினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதற்கிடையில் இந்தியாவும் சீனாவும் விரும்பினால் இரு நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை இரு நாடுகளும் ஏற்க மறுத்துவிட்டன. பின்னர் இந்தியா - சீனா இடையேயான மோதல் உச்சத்தை அடைந்தபோது அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு அளித்தது.

சீனா - இந்தியா

இந்நிலையில், தற்போது ட்ரம்ப் மீண்டும் மத்தியஸ்தம் செய்வது போன்ற ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி, அதிபர் ட்ரம்ப் கூறியதாகச் சில கருத்துகளை நேற்று தெரிவித்திருந்தார். அதில், ‘நான் (ட்ரம்ப்) இந்தியா மற்றும் சீன மக்களை அதிகம் நேசிக்கிறேன். அந்த மக்களுக்கு அமைதியை நிலைநாட்ட அனைத்தையும் செய்ய விரும்புகிறேன்” எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

Also Read: அமெரிக்கா:`நம்ப முடியாத வாக்கு எண்ணிக்கையுடன் வெற்றி!’ - அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை

கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, “இந்தியாவும் எங்களுக்கு ஒரு சிறந்த நண்பராகவும் பார்ட்னராகவும் உள்ளது. எனது வெளியுறவு பிரதிநிதிகளுடன் எனக்கு சிறந்த உறவு இருக்கிறது. நாங்கள் பல பிரச்னைகள் பற்றி அடிக்கடி பேசுவோம். எல்லையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்த மோதல் பற்றியும் சீனாவின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பிலிருந்து வெளிப்படும் ஆபத்து பற்றியும் விவாதித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப்

இதே இந்தியா - சீனா விவகாரம் மற்றி அறிக்கை வெளியிட்டிருந்த இந்திய அமெரிக்க நிதிக் குழுவின் இணைத் தலைவர் அல் மேசன், “அமெரிக்காவின் முந்தைய ஜனாதிபதிகளான கிளிண்டன், புஷ் சீனியர், புஷ் ஜூனியர் மற்றும் ஒபாமா போன்ற ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் சீனா - இந்தியாவுக்கு இடையேயான பிரச்னையில் இந்தியாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தயங்கினர். ஆனால், அதிபர் ட்ரம்ப் மட்டுமே இதைத் தைரியமாக வெளியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அங்கு சென்று சென்று , ‘நான் இந்தியாவை நேசிக்கிறேன் அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது. அமெரிக்கா இந்தியாவுடன் துணை நிற்கிறது’ என அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் முன்னிலையில் ட்ரம்ப் இதைத் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடக்கும் பிரச்னை தொடர்பாக அமெரிக்கா மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறது.



source https://www.vikatan.com/news/international/i-love-the-people-of-india-and-china-trump-has-said

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக