Ad

வியாழன், 9 ஜூலை, 2020

கொரோனா: பாதிக்கப்பட்ட பணியாளர்கள்! - மூடப்பட்ட மகேந்திரகிரி இஸ்ரோ மையம்

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளதால் அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது.

கொரோனா வைரஸ்

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 1,409 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 735 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். 660 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

Also Read: இரு டாக்டர்களுக்கு கொரோனா; தப்பாத ஆட்சியர் அலுவலகம்! -அதிர்ச்சிகொடுத்த நெல்லை நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களிலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. காவல்நிலையத்தில் பணியாற்றியவர்கள், ஆயுதப்படை குடியிருப்பு ஆகிய இடங்களில் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் துணை தாசில்தாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை ஆட்சியர் அலுவலகம்

இ-பாஸ் வழங்கும் பிரிவில் இருந்த துணை தாசில்தாருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், அவருடன் பணியாற்றியவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன், அவர் பணியாற்றிய, ஆட்சியர் அலுவலகப் பகுதி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

Also Read: `கேரள எல்லை... கூடங்குளம்... மகேந்திரகிரி இஸ்ரோ மையம்!’ - கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டும் நெல்லை

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வளாகம் உள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றும் இந்த மையத்தில் ராக்கெட்டுகளுக்கான திரவ எரிபொருள் உந்தும சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மூடப்பட்ட மகேந்திரகிரி இஸ்ரோ வளாகம்

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றும் இரு ஒப்பந்தப் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அந்த வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அத்துடன், இன்று (10-ம் தேதி) முதல் வரும் 14-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு இஸ்ரோ வளாகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.



source https://www.vikatan.com/news/general-news/mahendragiri-isro-center-has-been-closed-for-5-days-due-to-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக