சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்துவைத்து வியாபாரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். சாத்தான்குளம் காவல்நிலைய விசாரணைக்குப் பிறகு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்த நாள்களில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். `காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலால்தான் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர்' என்ற செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவர, மக்கள் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த இருவர் மரணம் குறித்த வழக்கு, சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம், `சி.பி.ஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டால், நீதி கிடைப்பதில் தாமதமாகும்' என்ற எதிர்ப்புக் குரல்களும் எழத் தொடங்கியிருக்கின்றன.
Also Read: `சாத்தான்குளம் வழக்கும், தமிழக அரசின் தந்திரங்களும்..!' - விளக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/vikatan-poll-regarding-sathankulam-death-and-cbi-investigation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக