Ad

புதன், 1 ஜூலை, 2020

சாத்தான்குளம்: `பெண் காவலருக்கு விடுப்பு, பாதுகாப்பு!’ -உயர்நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

உயர்நீதிமன்றம் உத்தரவு!

சாத்தான்குளம்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணையை நடத்திவருகிறது. இன்று காலையில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதி அளித்த சாட்சியம் மிக முக்கியமானது.

இந்த நிலையில் காவலர் ரேவதியைத் தொடர்புகொண்டு நாங்கள் பேச இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவருக்கு உரிய பாதுகாப்பும், விடுப்பும், வேலைக்கான சம்பளமும் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களை ஒரே இரவில் கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் பாராட்டை தெரிவித்தது.



source https://www.vikatan.com/news/general-news/02-07-2020-this-day-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக