சத்தியமா விடவே கூடாது!
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் மரணமடைந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சினிமா பிரபலங்கள் தொடங்கி கிரிக்கெட் வீரர்கள் வரை பிரபலங்கள் பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனைத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020
அவர் தனது ட்விட்டர் பதிவில், ``தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்டிரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. #சத்தியமா_விடவே_கூடாது” எனப் பதிவிட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/01-07-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக